இந்தியாவில் அக்டோபர் 12ஆம் தேதிக்குள் 5ஜி சேவை தொடங்கப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நிகழ்வு ஒன்றில் தெரிவித்துள்ளார்.


"அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் 5G நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு. அது மலிவு விலையில் இருப்பதை உறுதி செய்வோம். குறிப்பாக தொழில்துறை நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் கவனம் செலுத்தப்படும்" என்று அவர் கூறினார்.




"நாங்கள் 5G சேவைகளை விரைவாக வெளியிட திட்டமிட்டுள்ளோம், தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் அந்த வகையில் செயல்படுகின்றனர் மற்றும் அதற்கான தேவைகள் நிறுவப்பட்டு வருகின்றன. அக்டோபர் 12 ம் தேதிக்குள் 5G சேவைகளை நாங்கள் தொடங்குவோம், பின்னர் பெருநகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் மேலும் இவை விரிவாக்கப்படும்" என்று அவர் மேலும் கூறினார்.


பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, அதானி டேட்டா நெட்வொர்க்குகள் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய சேவை நிறுவனங்களிடம் இருந்து சுமார் 17,876 கோடி ரூபாயை தொலைதொடர்புத்துறை பெற்றுள்ளது.
நாட்டின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு அலைக்கற்றை ஏலமான 5ஜி ரூபாய் 1.5 லட்சம் கோடி மதிப்பிலான ஏலங்களைப் பெற்றது, முகேஷ் அம்பானியின் ஜியோ ரூபாய். 87,946.93 கோடிக்கு ஏலத்தில் விற்கப்பட்ட அனைத்து ஏர்வேவ்களில் கிட்டத்தட்ட பாதியை வாங்கியது.


ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு கடிதங்களை அதிகாரபூர்வமாக வழங்கியதைத் தொடர்ந்து, 5ஜி அறிமுகத்திற்கு தயாராகுமாறு தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களை அமைச்சர் வைஷ்ணவ் முன்பு கேட்டுக் கொண்டார்.


முதன்முறையாக, தொலைத்தொடர்புத் துறை (DoT) 5ஜி அலைகளை ஏலம் எடுத்தவர்கள் முன்பணம் செலுத்திய அதே நாளில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக் கடிதங்களை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.






"5G அப்டேட்: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக் கடிதம் வெளியிடப்பட்டது. 5G வெளியீட்டிற்குத் தயாராகுமாறு TSPகளை அந்தக் கடிதம் கோருகிறது" என்று அமைச்சர் வைஷ்ணவ் தனது சோஷியல் மீடியா தளத்தில் எழுதியிருந்தார்.