கார்ப்பரேட் உலகில் வேலை நேரம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஜென் சி (Gen Z) தலைமுறையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் இரவு 9 மணிக்கு வந்த அலுவலக அழைப்பை ஏற்க மறுத்த சம்பவம் இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Continues below advertisement

இதுகுறித்து லிங்க்டுஇன் தளத்தில் சஞ்சித் கோயல் போஸ்ட் இட்டுள்ளார். அதில் பகிரப்பட்டுள்ள தகவலின்படி, நிறுவனம் ஒன்றின் மேலாளர் ஒருவர், தனது குழுவில் உள்ள ஜென் சி ஊழியரை இரவு 9 மணியளவில் அலுவலக வேலை தொடர்பாகத் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றுள்ளார்.

நோ சொன்ன ஊழியர்

ஆனால், அந்த ஊழியர் அந்த அழைப்பை ஏற்க மறுத்ததோடு, குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "தற்போது அலுவலக நேரம் முடிந்துவிட்டது. வேலை தொடர்பான எந்தவொரு விஷயமாக இருந்தாலும், அதனை நாளை காலை வழக்கமான வேலை நேரத்தில் திட்டமிடுங்கள் என மிகவும் வெளிப்படையாகவும், நேரடியாகவும் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

இதையும் வாசிக்கலாம்: Minister Raj mohan: பள்ளிகளில் சாதி, மத அடையாளங்களுக்கு நோ; தனியார் பள்ளி கல்விக்கட்டணம்- அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி

மேலாளர் ’’இரவு 9 மணி மீட்டிங்கில் எல்லோருமே  இணைந்து விட்டார்கள்; நீங்கள்தான் இணையவில்லை’’ என்று கூறினார்.

அதற்கு பதிலளித்த ஊழியர், ’’மற்ற எல்லோரும் சோர்ந்துவிட்டனர். நான் அப்படி ஆகக்கூடாது என்று விரும்புகிறேன்’’ என்று கூற, ‘’இந்த ஒரு மீட்டிங்தானே’’ என்று மேலாளர் விடாமல் கேட்க, ’’அப்படியானால், அதை வேலை நேரத்தில் வையுங்கள். ஒரு முறைதான் என்றுதான் எல்லாமே ஆரம்பிக்கும்’’ என்று பேசியுள்ளார்.  

இந்த பதிவு இணையத்தில் வெளியான சிறிது நேரத்திலேயே வைரலாகப் பரவி, பெரிய அளவிலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இணையவாசிகள் பலர் இதற்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

வாழ்க்கை - வேலை பேலன்ஸ்

இன்றைய இளைய தலைமுறையினர் தங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கும், அலுவலக வேலைக்கும் இடையிலான எல்லையை சரியாகப் பேணுவதில் உறுதியாக இருக்கிறார்கள் என்று கூறி பலரும் அந்த ஊழியரைப் பாராட்டியுள்ளனர். டாக்ஸிக் பணி கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவர, இதுபோன்ற துணிச்சலான முடிவுகள் அவசியம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதே வேளையில், சில மூத்த ஊழியர்கள் மற்றும் நிறுவனர்கள் இதனை விமர்சித்துள்ளனர். எதிர்பாராத அவசரகால சூழ்நிலைகளில் கொஞ்சம் நெகிழ்வுத்தன்மையோடு நடந்துகொள்வதுதான் சரியான தொழில்முறை என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

வேலை- வாழ்வின் ஓர் அங்கம் மட்டுமே

வேலை என்பது வாழ்க்கையின் ஓர் அங்கம் மட்டுமே என்ற மனநிலை இளைய தலைமுறையினரிடம் அதிகரித்துள்ளதை இந்தச் சம்பவம் தெளிவாகக் காட்டுகிறது. நவீன காலப் பணிச்சூழலில் நிறுவனங்களும், மேலாளர்களும் ஊழியர்களின் தனிப்பட்ட நேரத்தை மதிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த இணைய விவாதம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.