தமிழகத்தின் குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த லெப்டினண்ட் கலோனல் ஹர்ஜிந்தர் சிங்கின் இறுதி சடங்கு இன்று நடைபெற்றது. இதில், முப்படை தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் இரு மகள்கள் கலந்து கொண்டனர். பிபின் ராவத், மதுலிகா ராவத் இறுதிச்சடங்கில் ஹர்ஜிந்தர் சிங் குடும்பம் கலந்துகொண்டது.
கடந்த 10-ஆம் தேதி முப்படை தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத்தின் இறுதி சடங்கு நடைபெற்றது. இதில், ஹர்ஜிந்தர் சிங்கின் துணைவியார் Maj Agnes மஜ் அக்னேஸ் கலந்து கொண்டிருந்தார். அன்றைய தேதியில், ஹர்ஜிந்தர் சிங்கின் உடல் அடையாளம் காணப்படாமல் இருந்தது.
இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த லெப்டினண்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங், ஹவில்தார் சத்பால் ராய், ஜிதேந்தர் குமார், குர்சேவாக்சிங் ஆகியோரின் உடல்கள் நேற்று அடையாளம் காணப்பட்டன. இறந்தவரின் உடல்கள் அவர்கள் குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
லெப்டினண்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங்கின் இறுதி சடங்கை அவரது மகள் ப்ரீத் கவுர் செய்தார். இந்த சடங்கில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு மரியாதை செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் ஹர்ஜிந்தர் சிங். பிபின் ராவத் பணியாற்றிய 11 கூர்க்கா ரைஃபிள்ஸ் படைப்பிரிவில் பணியாற்றிய இவர் சியாச்சின் பனிப்பாறை போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
பணியில் உயிர் நீத்த பின்பும், முப்படை தளபதி ஜெனரல் பிபின் ராவத் - ஹர்ஜிந்தர் சிங் இடையே உள்ள நட்புறவு பிரிக்க முடியாத பிணைப்பைக் கொண்டவையாகத் திகழ்கின்றன.
இதற்கிடையே, ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவரான லான்ஸ் நாயக் பி சாய் தேஜாவின் உடலுக்கு ராணுவ மரியாதையுடன் அவரது சொந்த ஊரான ஆந்திர பிரதேசம், சித்தூர் மாவட்டத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் பார்க்க..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்