Watch Video: கும்பமேளாவில் குவிந்த பக்தர்கள்.. உணவளித்து மகிழ்ந்த அதானி
இந்தியாவின் முன்னணி கோடீஸ்வர்களில் ஒருவரும் தொழிலதிபருமான கவுதம் அதானி, தனது மனைவி பிரித்தி அதானியுடன் இணைந்து, கும்பமேளாவுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு உணவு வழங்கினார்.

பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவின் போது இஸ்கான் கோயிலில் நடைபெற்ற 'சேவா' நிகழ்ச்சியில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி பங்கேற்றுள்ளார். இந்தியாவின் முன்னணி கோடீஸ்வர்களில் ஒருவரும் தொழிலதிபருமான கவுதம் அதானி, தனது மனைவி பிரித்தி அதானியுடன் இணைந்து, கும்பமேளாவுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு உணவு வழங்கினார்.
பக்திமயமான அதானி:
கும்பமேளாவில் மஹாபிரசாத் சேவா திட்டத்தின் கீழ், இஸ்கான் அமைப்புடன் இணைந்து தினமும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேருக்கு உணவு வழங்கி வருகிறது அதானி குழுமம். பிரசித்தி பெற்ற கும்பமேளாவில் பங்கேற்பதற்காக கவுதம் அதானி இன்று பிரயாக்ராஜ் சென்றடைந்தார்.
இதுகுறித்து பேசிய அவர், "மகா கும்பமேளாவின் கலந்து கொள்வது உற்சாகமாக இருக்கிறது. 'மஹாபிரசாத் சேவா' திட்டத்தின் கீழ் 50 லட்சம் பக்தர்களுக்கு உணவு வழங்க உள்ளோம். இதற்காக, மேளா பகுதியிலும் வெளியிலும் இரண்டு சமையலறைகளில் உணவு தயாரிக்கப்படும். மகாகும்பமேளா பகுதியில் 40 இடங்களில் மஹாபிரசாதம் விநியோகிக்கப்படும். இந்த முயற்சியில் 2,500 தன்னார்வலர்கள் ஈடுபடுவார்கள்" என்றார்.
மகா கும்பமேளா:
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, மகா கும்பமேளா பிரமாண்டமாக நடைபெறும். இந்த ஆன்மீக கொண்டாட்ட நிகழ்வில் துறவிகள், ஆண்கள் , பெண்கள், குழந்தைகள், பண்டிதர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கும்பமேளா புனித நீரில் நீராடுவதுடன், பாவங்களைப் போக்குவதற்கும், மோட்சத்திற்கான (விடுதலை) பாதையில் இறங்குவதற்கும் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
4,000 ஹெக்டேர் பரப்பளவில் கும்பமேளா மைதானம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் வருகையைக் கையாள ஆற்றின் இரு கரைகளிலும் 25 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உ.பி. காவல்துறை 2,700 AI-செயல்படுத்தப்பட்ட கேமராக்களை நிறுவியுள்ளது. பாதுகாப்பை மேம்படுத்த நீருக்கடியில் ட்ரோன்களைப் பயன்படுத்துகிறது.
இதையும் படிக்க: TNTET Exam: எப்போதுதான் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு? ஏங்கி நிற்கும் தேர்வர்கள்! டிஆர்பி செவிசாய்க்குமா?