நொய்டாவில் உத்தரபிரதேச காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படையினரால் இணைய மோசடி கும்பல் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டது. தொழில்நுட்ப ஆதரவு தருவதாகவும் வரியை திருப்பிச் செலுத்த உதவுவதாகக் கூறி வெளிநாட்டினரிடம் 170 கோடி ரூபாயை ஏமாற்றியுள்ளனர்.


உத்தரப் பிரதேச காவல்துறை சிறப்பு அதிரடி படையினர், கால் சென்டரை இயக்கிய கும்பலைச் சேர்ந்த 10 பேரை கைது செய்தனர். மென்பொருளைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களின் கணினிகள் மற்றும் மடிக்கணினிகளை தொலைதூரத்திலிருந்தே அவர்கள் கட்டுப்படுத்தி ஏமாற்றி உள்ளனர்.


நொய்டா செக்டார் 59ல் உள்ள அவர்களது பணியிடத்தில் சோதனை நடத்தப்பட்டதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கும்பல் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, லெபனான் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் உள்ளவர்களை குறிவைத்து அதிநவீன மென்பொருளை பயன்படுத்தி வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


 






மூத்த காவல் கண்காணிப்பாளர் விஷால் விக்ரம் சிங் இதுகுறித்து கூறுகையில், "பாதிக்கப்பட்டவர்களின் சாதனங்களை தொலைவிலிருந்து கட்டுப்படுத்த பல்வேறு நுட்பங்களை ஏமாற்று கும்பல் பயன்படுத்தி உள்ளது. அவர்களின் பிரச்னைகளைத் தீர்க்க தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதாக மோசடி கும்பல் உறுதி அளித்தது.


மோசடி செய்தவர்களிடம் இருந்து 70 டெஸ்க்டாப் கணினிகள் மற்றும் பல மொபைல் போன்கள், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விரைவில் மின்னணு சாதனங்களின் தடயவியல் பரிசோதனை செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.


வங்கி அறிக்கைகளின் அடிப்படையில், இணைய மோசடி செய்பவர்கள் இதுவரை மக்களிடமிருந்து ரூ. 170 கோடியை ஏமாற்றியுள்ளனர். வங்கிக் கணக்குகளை முடக்கி, மற்ற வங்கிக் கணக்குகள் குறித்த கூடுதல் தகவல்களைப் பெற்ற பிறகு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.


இந்த மோசடியின் மூளையாக செயல்பட்டவர்கள் வினோத் சிங் மற்றும் கரண் மோகன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறப்பு அதிரடி படை அலுவலர்கள் தெரிவித்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண