விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் கனவுத் திட்டமான ககன்யானின் ஒரு பகுதியாக, இடர் காலங்களில் குறைந்த உயரத்தில் இருந்து விண்வெளி வீரர்களை தரையிறக்கும் எஞ்ஜின் சோதனை (Low Altitude Escape Motor (LEM) வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.


 'ககன்யான்' திட்டத்த்தை விரைவில் செயல்படுத்தும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, 'இஸ்ரோ' தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  இதற்கு பயன்படுத்தப்பட உள்ள, ஜி.எஸ்.எல்.வி.,(Geosynchronous Satellite Launch Vehicle)ராக்கெட்டில் பொருத்தப்படவுள்ள, human-rated solid rocket booster (HS200) -ரின் பரிசோதனை வெற்றிகரமாக பரிசோதனை செய்யபப்ட்டது. 


விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக தரையிறக்கும் நோக்கத்தில், ஸ்ரீஹரிகோட்டாவில் இந்த பரிசோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்தது மைல்கல்லாக கருதப்படுகிறது. விண்வெளி பயணத்தின்போது, விண்வெளி வீரர்களுக்கு எதாவது சிக்கல் ஏற்பட்டாலோ, அல்லது திட்டத்தில் எதாவது கோளாறு ஏற்பட்டால், தோல்வியடைந்தால், வீரர்கள் குழு தப்பிக்க இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.






ககன்யான்- 1 (Gaganyaan 1)


இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் கனவு திட்டம் ‘ககன்யான்’. விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இந்தத் திட்டத்திற்கான ஏற்பாடுகளை இஸ்ரோ தீவிரமாக செய்து வருகிறது. இதன் மூலம் புவியின் குறைந்த அடுக்குகளில் சுற்றுப்பாதைக்கு (low-Earth orbit,)மனிதனை அனுப்புவது சாத்தியமாகும்.  ககன்யான் திட்டம் மூலம் தனித்துவமான ஏவுகணைகளை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இது இரண்டு முறையாக செயல்படுத்தப்படுத்தப்படுகிறது. இரண்டு ஆளில்லா விண்கலன்கள் மற்றும் மனிதனுடன் செல்லும் விண்கலன் என்று இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட இருக்கிறது. ஆளில்லா ஏவுகணைகளை பரிசோதித்த பின்னர், விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. மூன்று மனிதர்களை தாங்கி செல்லும் அளவு கொண்ட ககன்யான் விண்கலன் இந்தாண்டு இறுதியில் விண்ணில் ஏவப்பட உள்ளது. 



ககன்யான் - 2 (Gaganyaan 2)




ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு ஆளில்லா விண்கலன் மூலம் பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக விண்ணுக்குச் செலுத்தப்படும் ஆளில்லா விண்கலத்தில் ‘வியோமா மித்ரா’(Vyommitra) எனப்படும் பெண் ரோபோவும் பயணம் செய்ய இருக்கிறது. 


விண்வெளிக்குச் செல்லும் மனிதர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்தப் பரிசோதனை முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்தாண்டு இறுதிக்குள் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. 






இந்தத் திட்டத்திற்கான  கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனை (Geosynchronous Satellite Launch Vehicle) வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இது மேலும் நான்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது.




 

2023-ஆம் ஆண்டு ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த ஆண்டு மத்திய அரசு தெரிவித்திருந்தது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளை தொடா்ந்து  நான்காவது நாடாக விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை இந்தியா செயல்படுத்தப்பட உள்ளது பெருமையானது.





 

ககன்யான் -3 (Gaganyaan 3)


ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு மனிதை அனுப்பும் திட்டம் வரும் 2023 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் பயணிக்கும் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. விண்வெளி வீரர்கள் பல்வேறு பரிசோதனைகள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.  








மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண