இந்தியாவில் நாடு முழுவதும் நாளை முதல் வருங்கால வைப்பு நிதி மற்றும் பான் - ஆதார் இணைப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளன.


புதிய நடைமுறை:


ஜூன் மாதம் முடிவடைய உள்ளதை தொடர்ந்து, பல்வேறு புதிய மாற்றங்களுடன் நாளை  ஜூலை மாதம் தொடங்குகிறது. வீட்டின் சமையலறைக்கான தேவியானவற்றின் விலை முதற்கொண்டு வங்கிக் கொள்கைகள் வரை பல்வேறு மாற்றங்கள் ஏற்பட உள்ளன. அவை தொடர்பான விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.


சிலிண்டர் விலையில் மாற்றம்:


 எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோக நிறுவனங்கள் வழக்கமாக ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று சமையல் எரிவாயுவின் விலையை மதிப்பாய்வு செய்து திருத்தம் செய்கின்றன. அந்த வகையில் ஜுலை மாதமும் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக, 19 கிலோ வணிக ரீதியான எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைந்தது குறிப்பிடத்தக்கது. ஜூன் 1, 2023 அன்று, சிலிண்டரின் விலை ரூ.83.5-ம், மே 1 அன்று வணிக சிலிண்டரின் விலை ரூ.172 குறைக்கப்பட்டது. 


கிரெடிட் கார்டில் 20% டிசிஎஸ்: 


இந்தியர்கள் வெளிநாட்டில் கிரெடிட் கார்ட் பயன்படுத்தினால் அதற்கு வரி விதிக்கும் புதிய முறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, கிரெடிட் கார்ட் மூலம் மேற்கொள்ளப்படும் 7 லட்சத்துக்கும் மேலான செலவினங்களுக்கு 20% வரை TCS கட்டணம் விதிக்கப்பட உள்லது.


வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு: 


வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. அதன்படி,  ஐடிஆரை நீங்கள் இன்னும் தாக்கல் செய்யவில்லை என்றால், ஜூலை 31 ஆம் தேதிக்குள் அதை முடிக்கவும்.