காங்கிரஸ் தலைவர்கள் கமல்நாத் மற்றும், இந்திரா காந்தியின் மகனும் முன்னாள் எம்.பி.யுமான சஞ்சய் காந்தி ஆகியோர் 1984 ஆம் ஆண்டு புளூ ஸ்டார் ஆபரேஷன் மூலம் கொல்லப்பட்ட பயங்கரவாத தலைவர் ஜர்னைல் சிங் பிந்திரன்வாலேவுக்கு பணம் அனுப்பியதாக முன்னாள் சிறப்பு செயலாளர், ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (RAW Agent) ஜிபிஎஸ் சித்து கூறினார்.
ஸ்மிதா பிரகாஷ் உடனான ANI பாட்காஸ்ட் நிகழ்ச்சியின் போது, அந்த காலத்தில் இருந்த அரசியல் தலைவர்கள் பிந்த்ரன்வாலேவை "இந்துக்களை அச்சுறுத்த" பயன்படுத்தியதாகவும், நாட்டின் ஒருமைப்பாடு குறித்து மக்களிடையே அச்சத்தை உருவாக்க காலிஸ்தான் பிரச்சினையை உருவாக்க பயன்படுத்தியதாகவும் முன்னாள் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு செயலாளர் சித்து கூறினார்.
மேலும், ஹிந்துக்களை அச்சுறுத்த பிந்தரன்வாலேயைப் பயன்படுத்துவார்கள் என்றும் அப்போது இல்லாத புதிய பிரச்சினைகளை உருவாக்குவார்கள். அதனால், இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து ஏற்படும் என மக்கள் நினைக்கத் தொடங்கினார்கள் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ” காங்கிரஸ் தலைவர் கமல்நாத்தை மேற்கோள் காட்டி, அப்போது இருந்த காங்கிரஸ் சொன்ன சொல்லுக்கு தலையாட்டும் உயர் அதிகாரத்தில் இருக்கும் துறவியை தேர்வு செய்ய முடிவு செய்தனர். அப்போது நான் கனடாவில் இருந்தேன், காங்கிரஸ் ஏன் பிந்தரன்வாலேவுடன் கைக்கோர்க்கிறது என பலரும் கேளிவி எழுப்பினர். கமல்நாத் மற்றும் சஞ்சீவ் காந்தி பிந்தைரவாலேவுக்கு பணம் கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்” என சித்து தெரிவித்தார். பிந்திரன்வாலே சீக்கிய மதப் பிரிவான தம்தாமி தக்சலின் தலைவராக இருந்தார் மற்றும் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் உத்தரவின் பேரில், ஜூன் 1 மற்றும் ஜூன் 8, 1984 க்கு இடையில் பொற்கோயில் வளாகத்தில் இந்திய இராணுவத்தால் தொடங்கப்பட்ட ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையில் அவரது ஆதரவாளர்களுடன் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் ANI போட்காஸ்ட் இன் முந்தைய எபிசோடில், 1984 ஆபரேஷன் ப்ளூஸ்டாருக்கு தலைமை தாங்கிய லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) குல்தீப் சிங் ப்ரார், இந்திரா காந்தி பிந்த்ரன்வாலேவை வளர்த்து விட்டார். ஒரு கட்டத்தில் அவர் உச்சம் அடைந்த போது அவரை முடிக்க முடிவு செய்தார் என குறிப்பிட்டார.
EPS Statement: கல்விக்கடன் ரத்து என்ன ஆயிற்று? வெள்ளை அறிக்கை கொடுக்க தயாரா? - ஈபிஎஸ் காட்டம்..