முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆறாவது நினைவு தினம் ஜூலை 27, 2021 அன்று அனுசரிக்கப்படுகிறது.


முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் 2015 ஜூலை 27 அன்று ஷில்லாங்கில் ஐ.ஐ.எம்-ல் சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தபோது மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்து காலமானார். அப்போது அவருக்கு வயது 83.


அப்துல் கலாம், ஜூலை 25, 2002 முதல் ஜூலை 25, 2007 வரை இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக பணியாற்றினார். ஆளும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் எதிர்க்கட்சியான இந்திய தேசிய காங்கிரஸின் ஆதரவுடன் அவர் நியமிக்கப்பட்டார். பரவலாக 'மக்கள் ஜனாதிபதி' என்றும் அழைக்கப்பட்டார்.




கே.ஆர்.நாராயணனுக்குப் பிறகு அப்துல் கலாம் இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக பணியாற்றினார். இவர் இந்திய விண்வெளி விஞ்ஞானி ஆவார்.


திருமணம் செய்துகொள்ளாமல் எளிமையாக வாழ்க்கை வாழ்ந்த இந்தியாவின் ஒரே குடியரசுத் தலைவர் இவர்தான். இவர், பதவியில் இருந்த பிறகு, கல்வி, எழுத்து மற்றும் பொதுச் சேவை ஆகிய தனது பொது வாழ்க்கைக்குத் திரும்பினார்.


அவர் அக்டோபர் 15, 1931 இல் தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் ஒரு தமிழ் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தார்.


அவர் 1954ல் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்றார், பின்னர் 1955ல் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் விண்வெளி பொறியியல் படித்தார்.


போர் விமானி ஆக வேண்டும் என்ற தனது கனவை நனவாக்குவதை அவர் நூலிழையில் தவறவிட்டார். அவர் தகுதிப் போட்டிகளில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தார், மேலும் இந்திய விமானப்படையில் எட்டு பதவிகள் மட்டுமே இவருக்குக் கிடைத்தன.


அவர் 1960ல் டிஆர்டிஓவின் ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் கம்பெனியில் ஒரு விஞ்ஞானியாக சேர்ந்தார்.ஒரு சிறிய ஹோவர் கிராஃப்ட் வடிவமைப்பதன் மூலம் விஞ்ஞானியாக இவரது வாழ்க்கைத் தொடங்கியது.


புகழ்பெற்ற விண்வெளி விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் கீழ் பணிபுரிந்த ஒரு குழுவின் ஒரு பகுதியாகவும் இருந்தார். பின்னர் அவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மாற்றப்பட்டார், அங்கு அவர் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஏவுதல் வாகனத்தின் (SLV-III) திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டார், இது ஜூலை 1980ல் பூமிக்கு அருகிலுள்ள சுற்றுப்பாதையில் ரோகினி செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.


அவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) ஆகியவற்றில் அறிவியல் விஞ்ஞானியாக நாற்பது ஆண்டுகாலம் பணியாற்றினார்.


அவர் இந்தியாவின் சிவிலியன் ஸ்பேஸ் திட்டம் மற்றும் இராணுவ ஏவுகணை மேம்பாட்டு முயற்சிகளில் முன்னிலையில் பணியாற்றினார்.பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஏவுகணை வாகன தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான அவரது பணிக்காக இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று அறியப்பட்டார்.


•அப்துல் கலாம் முன்னாள் பிரதமர் வாஜ்பேயின் தலைமை அறிவியல் ஆலோசகராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலாளராகவும் ஜூலை 1992 முதல் டிசம்பர் 1999 வரை பணியாற்றினார்.


•1998ல் இந்தியாவின் பொக்ரான்-II அணுசக்தி சோதனைகளில் அவர் முக்கிய பங்கு வகித்தார், இது 1974ல் இந்தியா நடத்திய அசல் அணுசக்தி சோதனைக்குப் பிறகு முதல் முறையாகும்.


•அவர் 1970கள் மற்றும் 1990களுக்கு இடையில் போலார் சாட்டிலைட் லாஞ்ச் வெஹிக்கிள் (PSLV) மற்றும் SLV-III திட்டங்களை உருவாக்க முயற்சி செய்தார், இவை இரண்டும் வெற்றிகரமாக செயலாற்றப்பட்டன.