நான்கு நாட்கள் டெல்லி பயணம் மேற்கொண்ட மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி இன்று பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து பேச இருப்பதாக தகவல் கிடைத்தது.
ஒருகாலத்தில்,ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பராக கருதப்பட்ட தன்வர்,ஹரியானா மாநில காங்கிரஸ் கட்சியின் அடையாளமாக இருந்து வந்தார். கருத்து முரண்பாடுகள் காரணமாகவும், தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாத காரணித்தினாலும் 2019ல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறினார். அசோக் தன்வார் மூலம் , ஹரியானா அரசியலில் கால்பதிக்கும் முயற்சியில் மம்தா இறங்கியுள்ளார். அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்குள் திருணாமுல் காங்கிரஸ் முக்கிய பலம் பொருந்திய கட்சியாக உருவெடுக்கும் என்றும் மம்தா பேனர்ஜி தெரிவித்தார்.
இந்தநிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்ரமணிய சுவாமியும் இன்று டெல்லியில் மரியாதை நிமித்தமாக சந்தித்து கொண்டனர். அப்பொழுது, செய்தியாளர்கள் சுப்ரமணிய சுவாமியிடம் நீங்கள் இருவரும் சந்தித்து கொண்டதற்கு காரணம் என்ன? திரிணாமூல் காங்கிரஸ் கட்சியுடன் பாஜக கூட்டணி வைக்க போகிறதா என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த சுப்ரமணிய சுவாமி, நான் எப்போதும் மம்தா பக்கம் தான். நான் ஏற்கனவே மம்தாவுடன் கூட்டணியில் தான் இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
தற்போது, பிரதமர் மோடியை மம்தா பேனர்ஜி சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில்,"பஞ்சாப், அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள இந்திய சர்வதேச எல்லைப்பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகார வரம்பை 50 கி.மீ. ஆக அதிகரித்த முடிவு, திரிபுரா மாநிலத்தில் அரங்கேறிவரும் அரசுப் பயங்கரவாதம், நிதிப் பங்கீடு" உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை விவாதித்து இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
நியூசிலாந்து - இந்திய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியானது கான்பூரில் உள்ள கீரின் பார்க் மைதானத்தில் வருகின்ற நவம்பர் 25 ம் தேதி தொடங்கி 29 வரையிலும், 2 வது டெஸ்ட் போட்டியானது மும்பையில் உள்ள புகழ்மிக்க வான்கேடே மைதானத்தில் வருகிற டிசம்பர் 3 ம் தேதி தொடங்கி 7 ம் தேதி வரையும் நடைபெற இருக்கிறது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்