இந்தியாவில் பண்டிகைக் காலம் தொடங்கியிருக்கிறது. அதிகளவிலான வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு நிறுவனங்கள் ஆஃபர்களை அள்ளித்தருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகியவை மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக தளங்கள். தற்போது இந்த தளங்களில் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு  டிஸ்கவுண்ட்கள் வழங்கப்படுகின்றன. 


ஐபோனை வாங்குவது பலரின் கனவாக உள்ளது. இந்நிலையில் தற்போதைய ஆஃபர்களைப் பயன்படுத்தி பலரும் ஐபோன்களை ஆர்டர் செய்து வருகின்றனர். பல போலி ஆன்லைன் தளங்கள் உள்ளன. அவற்றில் யாரேனும் தெரியாமல் போன் போன்றவற்றை ஆர்டர் செய்யும்போது சோப்தான் டெலிவரி செய்யப்பட்டது என்ற செய்தியை அவ்வபோது படித்திருப்போம். ஆனால் தற்போது பலரும் நம்பி வாங்குகிற ஃப்லிப்கார்ட்டில் ஐபோனை ஆர்டர் செய்தவருக்கு இரண்டு சோப்புக் கட்டி டெலிவரி செய்யப்பட்டிருக்கின்றன. 


இதையும் படிக்க:


Indian Railways: ‛பான் பராக்’ கறையை அகற்ற ரூ.1200 கோடி - இந்தியன் ரயில்வே பரிதாபங்கள்!


மும்பையை சேர்ந்த சிம்ரன்பால் சிங் என்பவர் ஃப்ளிப்கார்ட்டில் ஐபோன் 12ஐ ஆர்டர் செய்துள்ளார். டிஸ்கவுண்ட்கள் போக 52,999 ரூபாயை ஆன்லைனிலேயே செலுத்தியுள்ளார். ஆர்டர் செய்துவிட்டு தனது கனவு ஐபோன் 12க்காக காத்திருந்தார் சிம்ரன்பால் சிங். அடுத்தநாள் ஃப்ளிப்கார்ட் தளத்திலிருந்து இவருக்கு ஒரு பார்சல் டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது. அந்த பார்சலை  பிரித்து அதனை அன்பாக்ஸ் செய்யும் வீடியோவையும் பதிவு செய்துள்ளார். அப்போதுதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தான் ஆர்டர் செய்த ஐபோன் 12க்கு பதிலாக அதில் இரண்டு நிர்மா சோப்புக் கட்டிகள்தான் இருந்துள்ளன. இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான அவர் அந்த அன்பாக்ஸிங் வீடியோவையும் யூடியூபில் பதிவேற்றம் செய்துள்ளார்.



 


இந்நிலையில் ஃப்ளிப்கார்ட்டின் கஸ்டமர் கேர் எண்ணிற்கு அழைத்து இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். இதனையடுத்து தன்னுடைய தவறை ஒப்புக்கொண்ட ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தனது தவறை சரி செய்வதாகவும் உறுதியளித்துள்ளது. முறையான விசாரணைக்கு பிறகு செலுத்தப்பட்ட  பணம் முழுவதுமாக திரும்ப செலுத்தப்படும் என்றும் உறுதியளித்துள்ளது. அதனால் அடுத்தமுறை ஆன்லைனில் நீங்கள் ஐபோனை ஆர்டர் செய்தால் முதலில் அதனை பிரித்து பார்த்துவிட்டு அதன் பிறகு டெலிவரி செய்யும் நபரிடம் ஓடிபியைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண