அனன்யா குமாரி அலெக்ஸ் வெங்காரா சட்டமன்றத் தொகுதியில் ஜனநாயக சமூக நீதிக் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட்டார். இந்த தொகுதியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளாராக பி.கே. குன்ஹாலிக்குட்டியும், இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) வேட்பாளர் பி.ஜிஜியும் போட்டியிட உள்ளனர். கேரளாவின் முதல் திருநங்கை வானொலி தொகுப்பாளராகவும், செய்தி தொகுப்பாளராகவும் சாதனை படைத்த அனன்யா குமாரி அலெக்ஸ், ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.
முன்னதாக செய்தி நிறுவனத்துக்கு அனன்யாகுமாரி அலெக்ஸ் அளித்த நேர்காணலில், " திருநங்கைகள் பொது சமூகத்தில் இருந்து மிகவும் அந்நியப்பட்டு போய் இருக்கின்றார்கள். விளிம்புநிலை மனிதர்களாகவே திருநங்கைகள் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றார்கள். திருநங்கைகளும் நல்ல தலைவர்களாக இருக்க முடியும். இதை நிரூபிக்க விரும்புகிறேன்" என தெரிவித்தார்.
அனன்யா குமாரி தனது வேட்புமனுவை ஏன் வாபஸ் பெற்றார் என்ற தகவல் அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான, காரணம் உட்கட்சி பூசலாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. கேரளாவில் உள்ள 140 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் போட்டியிட 2 ஆயிரத்து 180 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவற்றில் 1,061 மனுக்கள் ஏற்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.