2019 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வழக்கில், மக்களவை உறுப்பினர் கவிதா மலோத் மற்றும் அவரது கூட்டாளி குற்றவாளியளாக நிரூபிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பிரதிநிதித்துவச் சட்டப்படி, ஆறு மாத சிறைத்தண்டனையும், ரூ .10,000 அபராதத் தொகையும் செலுத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


கவிதா மலோத் தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு மஹபூபாபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அரசியல் வரலாற்றில் வாக்களார்களுக்கு பணம் கொடுத்த வழக்கில் சிட்டிங் எம்.பி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.     


சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான குற்றவியல் வழக்குகளை விசாரிக்கம் சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இருப்பினும், தீர்ப்பை எதிர்த்து தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் நோக்கில், இருவருக்கும் ஜாமீன் வழங்கப்படுவதாகவும் நீதிமன்றத்தில் தனது உத்தரவில் தெரிவித்தது.   


தேர்தல் ஆணையத்தின் அதிகம் செலவினம் செய்யப்படும் தொகுதிகள் என கண்டறியப்பட்ட பட்டியலில்  மஹபூபாபாத்தும் அடங்கும். இத்தொகுதியில், 2019 மக்களவைத் தேர்தலின்போது, பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டது.    






இந்நிலையில், மஹபூபாபாத் தொகுதியில் கவிதாவுக்கு ஆதரவாக சவுகத் அலி வாக்களார்களுக்கு பணம் விநியோகித்ததை பறக்கும் படை கண்டறிந்தது.  அவரிடமிருந்து சுமார் ரூ .9,500 ரொக்கம்  பறிமுதல் செய்யப்பட்டது. அலி முதல் குற்றவாளியாகவும், கவிதாவை இரண்டாவது குற்றவாளியாகவும் புர்கம்பகத் (Burgampahad) காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.   


தேர்தல் நடத்தை விதிமுறைகள்:  


இந்திய தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகளின்படி, முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் ரூ.10,00,000/- மேல் மதிப்புள்ள பொருட்கள் வருமான வரித்துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்படும். மேலும், சம்பந்தப்பட்டவரின் மீது இந்திய தண்டனை சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பின்பு விசாரணையில் முறையான ஆவணங்களை மேல்முறையீடு குழு (Appellate Authority) தாக்கல் செய்யும் பட்சத்தில் மீண்டும் உரிய நபரிடம் ஒப்படைக்கப்படும்.


2019 நாடாளுமன்றத் தேர்தலில், ரூ. 3,456.22 கோடி மதிப்பிலான    ரொக்கப் பணம், மது, போதைப் பொருள், இலவச பொருட்கள், தங்கம், வெள்ளிப் பொருட்கள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மட்டும், ரூ. 428 கோடி மதிப்பிலான ரொக்கப் பணம், மது, போதைப் பொருள், இலவச பொருட்கள், தங்கம், வெள்ளிப் பொருட்கள்  பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. 


மேலும் வாசிக்க: 


Mirabai Chanu | "முதல்ல இதை சாப்பிடணும்” : ஆசைப்பட்ட தங்கமகள் மீராபாய்...! லைஃப்டைம் முழுக்க ஃப்ரீ என்று சொன்ன டோமினோஸ்...!