இந்தியாவிலேயே முதன்முறையாக, 5G நெட்வொர்க்குடன் கூடிய ஆம்புலன்ஸ்கள் கொல்கத்தாவில் அறிமுகப்படுத்தப் படுகின்றன. இவை அவசரகால சிகிச்சை வழங்கப்படும் முறையையே முற்றிலும் மாற்றி புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இந்த ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போதே நோயாளிக்கு முக்கியமான பல சிகிச்சைகளை அளிக்கும் வகையிலும் உருவாக்க பட்டுள்ளது.


5ஜி நெட்வொர்க்குடன் கூடிய ஆம்புலன்ஸ்


இந்த சேவையை அறிமுகப்படுத்திய அப்பல்லோ மருத்துவமனை, மற்ற நகரங்களுக்கும் இதை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இது மருத்துவ சேவைக்கான அணுகலை மாற்றும் என்றும், அவசரகால சூழ்நிலைகளில் உயிர்களைக் காப்பாற்றும் என்று அப்போலோ மருத்துவமனை கூறுகிறது. இதற்காகவே வடிவமைக்கப்பட்ட, அதிநவீன 5G-இணைக்கப்பட்ட ஆம்புலன்ஸில் லேட்டஸ்ட் மருத்துவ உபகரணங்கள், நோயாளியின் கண்காணிப்பு பயன்பாடுகள் உள்ளன. மேலும் இதில் உள்ள டெலிமெட்ரி சாதனங்கள் நோயாளியின் நிலையை அறிக்கையாக வெகு விரைவில், மருத்துவமனைக்கு அனுப்பும். கூடுதலாக, இது அதிவேக 5G நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்ட உள் கேமராக்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் இருந்து நேரடியாக நோயாளியை காணவும் முடியும்.



என்ன பயன்?


அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் தலைவர்-மருத்துவமனை பிரிவு டாக்டர் கே ஹரி பிரசாத் கூறுகையில், மருத்துவமனையின் ICU அறையில் என்ன செய்ய முடியுமோ அதை ஆம்புலன்சிலும் செய்யலாம் என்றார். "அப்போலோ மருத்துவமனை எப்போதுமே சமூகத்திற்கு எளிதான அணுகலை வழங்க தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகின்றன. 5G இணைப்பை கொண்ட ஆம்புலன்ஸ்கள் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தைப் பயன்படுத்தி தீவிர நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை வழங்குகின்றன. இது நோயாளி இருக்கும் இடத்திலிருந்து மருத்துவமனைக்குச் செல்லும் பயணத்திலேயே, மேம்பட்ட சிகிச்சையை வழங்குகிறது. மற்றும் ஐசியு அறை போல செயல்படும் இது உண்மையிலேயே ஒரு மிகப்பெரிய முயற்சி. இது விலைமதிப்பற்ற உயிர்களை காப்பாற்ற ஒரு முக்கிய கருவியாக இருக்கும்," என்று அவர் மேலும் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்: Odisha Train Accident: ஒடிசா ரயில் விபத்தில் 280 உயிர்கள் பறிபோன சோகம்.. ஜனாதிபதி, பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்


கோல்டன் ஹவரை நேரத்தை மிச்சப்படுத்தும்


ஒரு ஆபத்தான நோயாளி மருத்துவமனைக்குச் செல்லும் போது, ஒவ்வொரு நொடியும் அவரது நிலையில் வித்தியாசம் ஏற்படலாம், அப்போது, 5G இணைப்பு கொண்ட ஆம்புலன்ஸ், மருத்துவமனையில் உள்ள ஐசியு அறையின் நீட்டிப்பாக செயல்படுகிறது. இதனால, கோல்டன் ஹவர் என்று அழைக்கப்படும் ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சையைத் தொடங்க உதவுகிறது. கோல்டன் ஹவர் நேரத்தை மிச்சப்படுத்த, நோயாளிக்கு அருகிலுள்ள ஆம்புலன்ஸ் விரைவாக சென்றடைவதை உறுதிசெய்ய, 5G நெட்வொர்க் கொண்ட ஆம்புலன்ஸின், லைவ் லொகேஷனை மருத்துவமனையின் கண்ட்ரோல் ரூமிற்கு அனுப்புகிறது. மேலும், ஆம்புலன்ஸ் நோயாளியின் முழுமையான டெலிமெட்ரி தரவை, நிகழ்நேரத்தில் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு காண்பிக்கிறது.



லைவ் கேமரா


இந்த தொழில்நுட்பம், மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களை விரைவாக என்ன செய்ய வேண்டும் என்ற முடிவெடுக்க அனுமதிக்கிறது மற்றும் ஆம்புலன்ஸில் இருக்கும் துணை மருத்துவர்களுக்கு, பயணத்தின் போதே, தேவையான உதவிகளை வழங்கவும் வழி செய்கிறது. நோயாளியை வந்தவுடன் சிறப்பாக நிர்வகிக்கவும் கோல்டன் ஹவர்ஸை மிச்சப்படுத்தவும் இது மருத்துவமனை ஊழியர்களை தயார்படுத்துகிறது. லைவ் கேமராவில் பார்க்க முடியும் என்பதால், ஆம்புலன்ஸில் உள்ள மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்கள், தேவைப்பட்டால், அடிப்படை நடைமுறைகளை மேற்கொள்வதற்காக மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்ட மருத்துவமனையில் உள்ள ER சிறப்பு மருத்துவர்களுடன் ஒத்துழைக்க அதனை பயன்படுத்தலாம். நடைமுறையைச் செயல்படுத்தவும், விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றவும் மருத்துவர்கள், ஆம்புலன்சில் உள்ள துணை மருத்துவருக்கு வழிகாட்ட முடியும். கொல்கத்தாவின் அப்போலோ மருத்துவமனைகளின் மருத்துவ சேவையின் இயக்குனர் டாக்டர் சுரிந்தர் சிங் பாட்டியா, அப்பல்லோ மருத்துவமனைகளுக்கான இந்த சிறிய நடவடிக்கை எதிர்காலத்தில் சுகாதாரத்துறையில் ஒரு மாபெரும் பாய்ச்சலாக இருக்கும் என்றார்.