கள்ள நோட்டை அச்சிட்ட கும்பல்.. தமிழ்நாட்டில் அதிரடி சோதனை.. நடந்தது என்ன?
கள்ள நோட்டுகளை அச்சிட்ட கும்பலை பிடிக்கும் நோக்கில் தமிழ்நாடு, பீகாரில் உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் 11 வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

கள்ள நோட்டுகளை அச்சிட்டதாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்பட 11 இடங்களில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி, 9 பேரை கைது செய்துள்ளனர்.
கள்ள நோட்டை அச்சிட்ட கும்பல்:
Just In




கடந்த 8ஆம் தேதி, ரிசர்வ் வங்கி முத்திரை மற்றும் இந்திய முத்திரை பொறிக்கப்பட்ட இந்திய ரூபாய் நோட்டு காகிதத்தை இறக்குமதி செய்தது தொடர்பாக உத்தரப் பிரதேசத்தின் காஜிப்பூர் மாவட்டம் மற்றும் கர்நாடகாவின் பெங்களூருவில் 2 பேரை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கைது செய்தது.
இதன் தொடர்ச்சியாக இறக்குமதி செய்யப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட தாள்களைப் பயன்படுத்தி கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிட்ட இரண்டு அச்சகங்களை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்தது. இது குறித்த புகாரின் அடிப்படையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், மகாராஷ்டிரா, ஹரியானா, தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் பீகாரில் நேற்று வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் 11 வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். அதன் அடிப்படையில் மேலும் 7 கள்ள நோட்டுகள் அச்சிட்ட உட்தொகுப்பு அமைப்புகள் கைப்பற்றப்பட்டன.
மும்பையின் விக்ரோலி பகுதியில் ரூ. 50, ரூ. 100 மதிப்புள்ள போலி ரூபாய் தயாரிப்பு இயந்திரங்கள்/கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அதிரடி காட்டிய அதிகாரிகள்:
இதுகுறித்து நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "மேற்கு கோதாவரியில் முக்கியமான பாதுகாப்பு ஆவணமும் அச்சுப்பொறியும், ககாரியா மாவட்டத்தில் மடிக்கணினிகள், அச்சுப்பொறி மற்றும் பாதுகாப்பு ஆவணம் போன்ற ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.
டிஆர்ஐ அதிகாரிகளின் புகாரின் அடிப்படையில் மூன்று குற்றவாளிகளும் அதிகார வரம்பிற்குட்பட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட விசாரணை நடந்து வருகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ”மனிதர்கள் தங்கள் ஆன்மாவை புதுப்பிக்க வேண்டும்” : ABP Network தலைமைச் செய்தி ஆசிரியர் அதிதேப் சர்க்காரின் முழுப் பேச்சு..!