சமூக வலைதளங்களில் எப்போதும் ஒரு சில தகவல்கள் மிகவும் வேகமாக வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக போலி செய்திகள் உண்மையான செய்திகளைவிட மிகவும் வேகமாக பரவி விடும். குறிப்பாக அரசின் திட்டங்கள் அல்லது முக்கிய முடிவுகள் தொடர்பாக ஒரு சில நேரங்களில் போலி செய்திகள் பரவுவது வழக்கம். அந்தவகையில் தற்போது ஒரு போலி செய்தி ஒன்று பரவி வருகிறது. அதாவது வீட்டில் குடியிருப்பவர்கள் செலுத்தும் வாடகைக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்ட் விதிக்கப்பட உள்ளதாக செய்தி ஒன்று வேகமாக பரவி வந்தது.


 


இந்நிலையில் இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவியது. இந்தச் செய்தியின் உண்மை தன்மை தொடர்பாக மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைப்பான பிஐபி ஒரு பதிவை செய்துள்ளது. அந்தப் பதிவில் இந்தச் செய்தியின் உண்மை தொடர்பான விளக்கத்தை அளித்துள்ளது. 


 






உண்மை என்ன?


அந்தப் பதிவில், “வாடகை வீட்டில் இருப்பவர்களின் வாடகைக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்ற செய்தி பரவி வருகிறது. ஆனால் இதில் உண்மை இல்லை” எனப் பதிவிட்டுள்ளது. அத்துடன் ஜிஎஸ்டி தொடர்பான தெளிவான விளக்கம் ஒன்றையும் கொடுத்துள்ளது. 


 


அதன்படி வீட்டி குடியிருப்புகளை தொழிற்சார்ந்த் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடும் போது மட்டுமே அதற்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். மேலும் குடியிருப்புகளை தனிநபரின் பயன்பாட்டிற்கு அளிக்கும் போது எந்தவித ஜிஎஸ்டி வரியும் விதிக்கபடாது. அத்துடன் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் தன்னுடைய சொந்த பயன்பாட்டிற்காக வாடகைக்கு இடம் எடுத்தால் அதற்கு ஜிஸ்டி வரி விதிக்கப்படாது. ஆகவே இந்தச் செய்தில்  உண்மை தன்மை எதுவும் இல்லை. மக்கள் தங்களுடைய சொந்த பயன்பாட்டிற்கு குடியிருப்புகளில் வாடகைக்கு தங்கி இருக்கும் படசத்தில் அவர்களிடம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது என்று தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. 


மத்திய அரசு அத்தியாவசிய பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை ஏற்றி வருவதாக கூறி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடுமையாக போராட்டம் நடத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து நாடு தழுவிய போராட்டமும் நடைபெற்றது. இந்தச் சூழலில் இதுபோன்ற போலி செய்து ஒன்று பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண