இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் ஜெய்சங்கர். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். அப்போது, அவரிடம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கிரக்கெட் விளையாட்டை ஒப்பிட்டு நாட்டை வழிநடத்தும் கேப்டன் மோடி பற்றி கூறுங்கள் என்று கேட்கிறார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது, “பிரதமர் மோடி, கேப்டன் மோடி ஏராளமான வலைப்பயிற்சி மேற்கொள்கிறார் என்று நினைக்கிறேன். அந்த வலைப்பயிற்சி காலை 6 மணிக்கு தொடங்குகிறது. அந்த பயிற்சி மிகவும் நீண்ட நேரம் நடக்கிறது. குறிப்பிட்ட சூழலில் குறிப்பிட்ட பந்துவீச்சாளர் திறம்பட செயல்படுவார் என்றால், அந்த நேரத்தில் அந்த பந்துவீச்சாளர் சுதந்திரமாக செயல்பட கேப்டன் மோடி அனுமதி அளிப்பார். அந்த பந்துவீச்சாளர் விக்கெட் எடுப்பதற்கான வாய்ப்பை கேப்டன் மோடி அனுமதிப்பார்.
நாம் அனைவரும் கடந்த 3 ஆண்டுகளையும், பெருந்தொற்று காலத்தையும் திரும்பி பார்த்தால் தெரியும். உங்களுக்கு தெரியும், ஊரடங்கு என்பது மிக மிக கடினமான முடிவு. ஆனால், அந்த நேரத்தில் அந்த முடிவு எடுக்கப்பட்டது. ஒருவேளை அந்த முடிவு எடுக்கப்படாவிட்டால் என்ன ஆயிருக்கும்?
உலகம் மிகவும் கடினமான சூழலில் இருக்கிறது. இந்தியா மிகவும் அசாதாரண நிலையில் உள்ளது. ஒரு கிரிக்கெட் அணியைப் போல உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாட்டிலும் வெற்றி பெற நாங்கள் விரும்புகிறோம்.”
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்விற்கு முன்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் குவாட் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரஷ்யா – உக்ரைன் போர், தென்கிழக்கு சீன கடலில் தற்போதுள்ள நிலை குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.
கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு உலகம் முழுவதும் பொருளாதார ரீதியாக மோசமான சூழல் ஏற்பட்டது. கொரோனா வைரஸ் அடுத்தடுத்து உருமாறி உலகத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்த நிலையில், மெல்ல மெல்ல உலகம் மீண்டு வருகிறது. இந்த சூழலில், ரஷ்யா - உக்ரைன் போர் உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதுடன் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. லே ஆஃப், பொருளாதார நிலை, இந்திய - சீன எல்லை விவகாரம், இந்திய - பாகிஸ்தான் எல்லை விவகாரம், வெளியுறவுக் கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும் படிக்க: “தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுகிறார்களா? விஷமத்தனமான செய்தி” - விளக்கம் கொடுத்த அமைச்சர்...!
மேலும் படிக்க: Watch Video: அடேங்கப்பா..! ஒரு ஆளு உயரத்திற்கு எழுந்து நிற்கும் ராஜநாகம்..! வீடியோ பாத்தா மிரண்டு போயிருவீங்க..!