மும்பை துறைமுகத்தில் கப்பலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐஎன்எஸ் ரன்வீர் கப்பலில் இந்த விபத்து நிகழ்ந்தது. மேலும், 11 கடற்படை வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கப்பலின் உள்பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்தை  கப்பல் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரன்வீர் போர்க்கப்பல் இந்திய கடற்படையில் 1986ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண