ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டிற்கு தடை வதிக்கும் வகையில் அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும்படி ரயில்வேவை சென்னை உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு கேட்டு கொண்டுள்ளது.
இதுகுறித்து நீதிபதிகள் வைத்தியநாதன், பி.டி. ஆஷா ஆகியோர் கொண்ட அமர்வு, "ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் வகையில் என்னென்ன தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது என்பது குறித்து மத்திய அரசின் அறிவார்ந்த வழக்கறிஞரிடம் கேட்கப்பட்டது" என தெரிவித்தது.
இதற்கு பதிலளித்த மத்திய அரசின் வழக்கறிஞர், "ரயில்வேஸின் நிலைபாடு என்ன என்பது குறித்து கேட்கபட்டுள்ளது" என்றார். தொடர்ந்து பேசிய நீதிபதிகள், இதே திசையில் ரயில்வேயின் செயல்திறன் மிக்க நடவடிக்கை மற்ற துறைகள் பின்பற்றுவதற்கு முன்மாதிரியாக இருக்கும் என கருத்து தெரிவித்தது.
இதையடுத்து, மத்திய அரசின் வழக்கறிஞர் வி சந்திரசேகரன், பிளாஸ்டிக் ஒழிப்பு நோக்கத்தை அடைவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெற்கு ரயில்வேயின் (எஸ்ஆர்) மூத்த சட்ட அலுவலர் எழுதிய கடிதத்தை சமர்ப்பித்தார். பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை தொடர்பான மனுக்களை விசாரித்த நீதிபதிகள், சமீபத்தில் தெற்கு ரயில்வே சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை கொள்கையின் நகலை அடுத்த விசாரணைக்கு முன் சமர்ப்பிக்குமாறு சிறப்பு அரசு வழக்கறிஞர் மற்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் (ஏஎஸ்ஜி) அலுவலகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.
ஜூலை 1ஆம் தேதி முதல் ஒரு முறை பயன்படும் பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்யவும், இறக்குமதி செய்யவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் மத்திய அரசு தடை விதித்தது. இந்த அறிவிப்பை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்டது. இதைக் கண்காணிக்க மத்திய, மாநில அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாகக் கடந்த 2019ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்குமாறு நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அதைத் தொடர்ந்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடை, ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்