Australia Innovation Visa: ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ள புதுமை விசா, இந்தியர்களுக்கு பெரும் பலனை வழங்கும் என நம்பப்படுகிறது.
ஆஸ்திரேலியா விசா:
மிகுந்த திறமைமிக்க தொழிலாளர்களை ஈர்க்கும் நோக்கில், ஆஸ்திரேலியான அரசாங்கள் இன்னோவேஷன் எனப்படும் புதுமை விசாவை அறிவித்துள்ளது. இது இந்தியாவில் உள்ள கைதேர்ந்த ஊழியர்களுக்கு நல்ல வாய்ப்புகளை வழங்கும் என நம்பப்படுகிறது. இந்த நடவடிக்கை பொருளாதார ரீதியாக பயனற்றதாகக் கருதப்பட்ட, சர்ச்சைக்குரிய முதலீட்டாளர் குடியேறும் திட்டத்தை மாற்றியமைக்கிறது. இது ஒட்டுமொத்த குடியேற்றத்தைக் குறைக்கும் அதே வேளையில், திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறந்த திறமைகளை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதுமை விசா என்றால் என்ன?
புதிய தேசிய இன்னோவேஷன் விசாவானது 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் முடிவடையும் உலகளாவிய திறமை விசா திட்டத்திற்குப் பதிலாக அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. "தேசிய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் வளர்ச்சியைத் தூண்டும், விதிவிலக்கான திறமையான புலம்பெயர்ந்தோருக்கு வாய்ப்பளிக்கும் விதமாக இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இந்திய தொழில் வல்லுநர்களுக்கு வாய்ப்பு:
இந்தியா, அதன் இளைஞர்கள் மற்றும் திறமையான மக்கள்தொகைக்காக அறியப்படுகிறது. இது ஆஸ்திரேலியாவின் புதிய இன்னோவேஷன் விசா மூலம் குறிப்பிடத்தக்க வகையில் பயனடையும் என நம்பப்படுகிறது. மைக்ரேட் வேர்ல்ட், DU டிஜிட்டல் குளோபல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஷாலினி லம்பா கூறுகையில், "இந்தியாவில் உள்ள திறமையான நிபுணர்களுக்கு இந்த விசா உற்சாகமான வாய்ப்புகளை வழங்குகிறது. இந்திய புலம்பெயர்ந்தோரின் வருகைக்கு தொழில்நுட்பத் துறை மிக முக்கிய உந்துதலாக உள்ளது. இந்த விசாவானது தொழில்துறை மற்றும் விவசாய மேம்பாட்டில் அவர்களின் நிபுணத்துவத்தை அங்கீகரிக்கிறது மற்றும் பயன்படுத்துகிறது. இது இந்தியத் திறமையாளர்களுக்கு ஆஸ்திரேலிய நிறுவனங்களில், பங்களிப்பதற்கும் புதிய வழிகளை ஆராய்வதற்கும் கதவுகளைத் திறக்கிறது.
இந்திய திறமைகளால் ஆஸ்திரேலியாவுக்கு ஆதாயம்:
இந்தியா போன்ற வளர்ந்து வரும் சந்தைகளில் இருந்து இளம், திறமையான திறமைகளை ஈர்ப்பதன் மூலம், பொருளாதார மற்றும் சமூக நன்மைகளை ஆஸ்திரேலியா கைப்பற்ற முடியும். இருப்பினும், தற்போதைய அமைப்பு சிக்கலானது மற்றும் திறம்பட வழங்கவில்லை. தேசிய சவால்களை எதிர்கொள்வதற்கும், அவர்களுக்குத் தேவையான திறன்களைப் பெறுவதற்கான திட்டத்தை மேம்படுத்துவதற்கும் ஒரு மறுசீரமைப்பு தேவை” என ஷாலினி லம்பா தெரிவித்துள்ளார்.