ரயில்வே சேவை என்பது தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கிடையில் ஒரு அடையாளமான போக்குவரத்து அமைப்பாக மட்டுமின்றி, சமூக, வர்த்தக மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றுகிறது. வரலாறும், நவீனமும் கலந்த இந்த மண்டலம், மக்கள் இடையே உறவை கட்டியமைத்து, வளர்ச்சியின் பாதையில் பயணிக்கச் செய்கிறது. உலகத்திலேயே மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக இந்திய ரயில்வே இருந்து வருகிறது.

தெற்கு ரயில்வே

தெற்கு ரயில்வே, மதராஸ் & சதர்ன் மஹாரட்டா ரயில்வே, தெற்கு இந்திய ரயில்வே, மற்றும் மைசூர் மாநில ரயில்வே ஆகிய மூன்று முக்கிய மாநில ரயில்வே நிறுவனங்களின் இணைப்பாக உருவானது. இது இந்தியாவின் பழமையான மற்றும் முக்கியமான ரயில்வே சேவைகளில் ஒன்றாகும். தெற்கு ரயில்வே (Southern Railway) என்பது இந்திய ரயில்வேயின் 19 மண்டலங்களில் ஒன்றாகும். இது 1951 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி இந்தியாவின் முதல் ரயில்வே மண்டலமாக உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் சென்னையில் அமைந்துள்ளது.

குறிப்பாக இந்திய ரயில்வே உலகின் பழமையான மற்றும் மிகப்பெரிய போக்குவரத்து வலையமைப்புகளில் ஒன்றாகும். இது 7,000க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களைக் கொண்டுள்ளன. தினமும் 22,000 க்கும் மேற்பட்ட ரயில்களை இயக்குகின்றன. இதில் 24 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயணிக்கின்றனர். இந்தியாவின் மிக முக்கிய போக்குவரத்து சேவைகளில் ஒன்றாக ரயில் சேவை இருந்து வருகிறது. 

ஹவுரா ரயில் நிலையம்

இந்த ஆயிரக்கணக்கான நிலையங்களில், மேற்கு வங்காளத்தில் உள்ள ஹவுரா ரயில் நிலையம் மிகவும் பரபரப்பானது என்றே சொல்ல வேண்டும். 1854 இல் நிறுவப்பட்ட இந்த ரயில் நிலையம், இந்தியாவின் பழமையான ரயில் நிலையமாகும். 23 நடைமேடைகள் மற்றும் 26 தடங்களுடன், இது நாட்டின் மிகப்பெரிய நிலையங்களில் ஒன்றாக உள்ளது. ஹவுரா ரயில் நிலையம் கொல்கத்தாவின் ஹூக்ளி ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது.

இது மேற்கு வங்கத்திற்கு மட்டுமல்ல, கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவிற்கும் ஒரு முக்கிய நுழைவாயிலாகும். இது நாட்டின் பிற பகுதிகளுக்கு நல்ல இணைப்பை வழங்குகிறது. இந்த நிலையம் இரண்டு வளாகங்களைக் கொண்டுள்ளது. ஹவுரா ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயணிகளையும், எக்ஸ்பிரஸ், உள்ளூர் EMU மற்றும் சரக்கு ரயில்கள் உட்பட ஒரு நாளைக்கு 600க்கும் மேற்பட்ட ரயில்களையும் கையாளுகிறது.

பிரம்மாண்ட கட்டுமானம்

1901-1906க்கு இடையில் பிரிட்டிஷ் கட்டடக் கலைஞர் ஹால்சி ரிக்கார்டோவால் வடிவமைக்கப்பட்ட இந்த கட்டடம், சிவப்பு செங்கலால் ஆன ஒரு பிரமாண்டமான கட்டமைப்பாகும். பழைய வளாகத்தின் நுழைவாயிலில் உள்ள 99 ஆண்டுகள் பழமையான 'போரோ கோடி' கடிகாரம் அதன் வரலாற்று பாரம்பரியத்தின் அடையாளமாகும்.

ஹவுரா இந்தியாவின் முதல் வணிக பயணிகள் ரயிலை 1854 ஆகஸ்ட் 15 அன்று ஹூக்ளிக்கு இயக்கியது. இது இரண்டாம் உலகப் போரின் போது ஒரு ராணுவ போக்குவரத்து மையமாகவும், பிரிவினையின் போது அகதிகள் ரயில்களுக்கான இடமாகவும் இருந்தது.

அதன் தெற்கே உள்ள ரயில்வே அருங்காட்சியகம், இந்திய ரயில்வேயின் வரலாற்றைக் காட்டுகிறது. வைஃபை, காத்திருப்பு அறைகள் மற்றும் உணவுக் கடைகள் போன்ற நவீன வசதிகளுடன், இது IGBC பிளாட்டினம் மதிப்பீட்டைப் பெற்ற முதல் 'பசுமை ரயில் நிலையம்' ஆகும்.