தமிழ்நாடு:


* நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக நடந்த வாகன சோதனையில் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.53.72 லட்சம் பணம் பறிமுதல் - மாநில தேர்தல் ஆணையம்


* அவசரம் ஏன்?- 1 - 9ஆம் வகுப்பு பள்ளிகள் திறப்பை ஒத்திவையுங்கள்- அன்புமணி வலியுறுத்தல்


* ஓசூர் மாநகராட்சியில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி போட்டி


* தமிழ்நாட்டில்  77% மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - ராதாகிருஷ்ணன் 


இந்தியா:


* நாடாளுமன்றத்தில் 2022 மற்றும் 23ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்


* மத்திய பட்ஜெட்டில் எந்த புதிய வரியும் விதிக்கப்படவில்லை - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்


* அடுத்த 100 ஆண்டுகளுக்கான பட்ஜெட் இது - பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்


* சாதாரண மக்களுக்கு பட்ஜெட்டில் பூஜ்யம்தான் உள்ளது - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி


* யூடியூப் தளத்தில் 1 கோடி பயனர்களை பெற்ற பிரதமர் நரேந்திர மோடி உலக தலைவர்களில் நம்பர் 1 இடத்தில் உள்ளார்.


* கேரளாவில் மிகவும் பிரபலமான பாம்பு பிடிப்பவரான வாவா சுரேஷின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம். வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை - மருத்துவமனை தகவல்


உலகம்:


* ஈரானில் உள்ள பூங்கா ஒன்றில் காவலரை கொன்றுவிட்டு, துணையுடன் தப்பித்த சிங்கம் 


* இங்கிலாந்து அரசின் ராணியாக திகழும் இராண்டாம் எலிசெபத்தின் மெழுகு சிலை வழுக்கைத் தலையாக வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


விளையாட்டு:


* ரூபாய் 20 லட்சம் அடிப்படை விலையில் ஐபிஎல் 2022  மெகா ஏலத்தில் அர்ஜுன் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார்


* விராட் கோலி எப்போதும் ஒரே மாதிரியாகவே விளையாட வேண்டும் - கவுதம் காம்பீர் அட்வைஸ்


* ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கு முன்பாக எட்டு வாரங்கள் தனிமையில் இருக்க வேண்டும். அந்த காலத்தில் நான் என் மனைவி அலிசா மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட இது எனக்கு வாய்ப்பளிக்கும் - மிட்செல் ஸ்டார்க்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண