தமிழ்நாடு :



  • குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடல் டெல்லி கொண்டு செல்லப்பட்டது

  • ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சக ராணுவ வீரர்களின் உடல்களும் டெல்லி கொண்டு செல்லப்பட்டது

  • ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களுக்கும் வெலிங்டனில் ராணுவ மரியாதை

  • குன்னூரில் இருந்து கோவை சூலூர் விமான நிலையம் கொண்டு வரும் பாதை முழுவதும் மக்கள் மலர்தூவி அஞ்சலி

  • முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் நேரில் அஞ்சலி

  • ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற இடத்தில் ஏர்மார்ஷல் மன்வேந்திரா சிங் தலைமையில் ராணுவ விசாரணை தொடங்கியது


இந்தியா :



  • ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களுக்கும் பிரதமர் மோடி இரவு நேரில் அஞ்சலி என தகவல்

  • முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின்ராவத் உள்பட 13 பேரின் மறைவிற்கு நாடாளுமன்றத்தில் மவுன அஞ்சலி

  • டெல்லி கொண்டு செல்லப்பட்ட பிபின்ராவத் உள்பட 13 பேரின் உடல்களை பெற ராணுவ வாகனங்கள் தயார் நிலையில் ஆயத்தம்

  • ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை அடையாளம் காண குடும்பத்தார் டெல்லி வருகை

  • மரபணு பரிசோதனை உள்பட அறிவியல் பரிசோதனை மூலமாக உடல்கள் அடையாளம் காண நடவடிக்கை

  • முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட வீரர்களின் உடல்களுக்கு மரியாதை செலுத்த டெல்லியில் மக்கள் குவிந்தனர்


உலகம் :



  • ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் உள்பட 13 பேர் மறைவிற்கு அமெரிக்க இரங்கல்

  • முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத் உள்பட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததற்கு உலக நாடுகள் இரங்கல்

  • குழந்தைகளின் முன்னேற்றத்தில் கொரோனா 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது – யுனிசெப்

  • ஆயுத விற்பனை பட்டியலில் உலகின் டாப் 100 இடங்களில் இந்தியாவின் மூன்று நிறுவனங்கள்

  • ஒமிக்ரான் வைரஸ் தொற்றின் தீவிரத்தால் உயிரிழப்பு அதிகரிக்கும் – ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை


விளையாட்டு :



  • ஒருநாள் போட்டி கேப்டன் பொறுப்பில் இருந்து கோலியை நீக்கியதற்கு சமூக வலைதளங்களில் பி.சி.சி.ஐ.க்கு கடும் கண்டனம்

  • பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் ஆஸ்திரேலியா

  • ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் டிராவிஸ் ஹெட் அபார சதம்

  • ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்சில் 14 நோ பால்களை வீசிய பென் ஸ்டோக்ஸ்


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண