பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் நீதிமன்றங்கள் சில கவனத்தை ஈர்க்கும் தீர்ப்புகளை அளித்து வருகின்றன. அந்தவகையில் தற்போது கொல்கத்தா உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றில் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் 2017ஆம் ஆண்டு 13வயது குழந்தை ஒன்றுக்கு எதிராக நடந்த பாலியல் தொல்லை தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. அந்த வழக்கில் 13 வயது சிறுமியை ஒருவர் மார்பக பகுதியில் தொட்டு முத்தம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் அவர் மீது பாலியல் வழக்கு பதிவிடப்பட்டிருந்தது. இந்த பாலியல் வழக்கை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் அந்த சிறுமிக்கு அப்போது மார்பக பகுதிகள் வளரவில்லை என்பதால் அது பாலியல் ரீதியான சீண்டலாக இருக்க முடியாது என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த பீபேக் சௌதரி, “பெண்களுக்கு மார்பக பகுதிகள் வளர்ந்துள்ளதா என்பது முக்கியமில்லை. அவர்களுடைய உடம்பின் அந்தரங்க பகுதிகளை தொடுவது என்பது பாலியல் ரீதியான சீண்டலாக பார்க்கப்படும். அவர்கள் உடலுறவு வைத்து கொள்ளவில்லை என்றாலும் அப்படி அந்தரங்க பகுதிகளை தொடுவது பாலியல் சீண்டலாகவே பார்க்கப்படும். ஆகவே இந்த வழக்கில் அந்த நபர் மீது பாலியல் ரீதியான வழக்குப்பதிவு செய்தது சரியான ஒன்று. அவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து சரி” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நபர் 2017ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமியிடம் அந்தரங்க பகுதியை தொட்டு முத்தமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் அவர் எந்தவித பாலியல் நோக்கமும் இல்லாமல் செயல்பட்டதாக கூறி வந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இது இனிமேல் வரும் பாலியல் வழக்கிற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமையும் என்று கருதப்படுகிறது. இந்த வழக்கின் தீர்ப்பை பலரும் வரவேற்று வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்