குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு (Droupadi Murmu) ’EV-Yatra’ போர்டல் மற்றும் மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய எரிசக்தி பாதுக்காப்பு தின (National Energy Conservation Day) கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற குடியரசுத் தலைவர் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்ய உதவும் வகையிலான போர்டர்கள் மற்றும் அதற்கு உதவும் மொபைல் செயலியின் பயன்பாட்டையும் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முர்மு. “ எதிர்கால தலைமுறை இளைஞர்களுக்கு மாசற்ற சூழலை வழங்க வேண்டிய கடமை நம் தலையாய கடமையாகும். மாசற்ற காற்றை சுவாசிப்பது மனிதனின் அடிப்படை உரிமை. சூற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் தடுப்பதன் மூலம் இப்பூமியில் பல உயிர்களைக் காப்பற்ற முடியும்.” என்று கூறினார்.
எரிசக்தி பாதுகாப்பு என்பது உலகளவில் மட்டும் அல்ல, நமது கடமையும் கூட. காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில், கார்பன் எமிசன், கிரீன்ஹவுஸ் வெளியேற்றம் ஆகியவற்றின் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா தொடர்ந்து செயல்பட்டு வருவதாக முர்மு கூறினார்.
EV யாத்ரா செயலி:
'EV Yathra' என்ற மொபைல் ஆப் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதன் மூலம் நாட்டில் உள்ள எலக்ட்ரானிக் வாகனங்களின் சார்ஜிங் பாயிண்ட்களின் விவரங்களை தெளிவாக தெரிந்து கொள்ளலாம். எந்தெந்த பகுதிகளில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பாயிண்ட்கள் உள்ளன, சார்ஜிங் ஸ்டேசன்களில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள சார்ஜர்களின் வகைகள், சார்ஜ் செய்வதற்கான கட்டண விவரம், சார்ஜிங் ஸ்லாட்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் விவரங்கள் அனைத்தும் இந்தச் செயலில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
பயனாளர்கள் சார்ஜ் செய்வதற்கு முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது. ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இ.வி.யாத்ரா செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத மின்சார வாகன பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. அதற்காக பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் அரசு சார்பில் பொது எலக்ட்ரானிக் சார்ஜிங் பாயிண்ட்களை அமைத்து வருகிறது. தற்போதுவரை நாட்டில் 5 ஆயிரத்து 151 சார்ஜிங் பாயிண்ட்கள் செயல்பட்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். நாட்டில் 18 லட்சம் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில் 698, மகாராஷ்டிராவில் 660, புதுடெல்லியில் 539 மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பாயிண்ட் செயல்பட்டு வருகிறது. Bureau of Energy Efficiency (BEE)- உருவாக்கியிருக்கும் EV Yatra செயலியில் மின்சார வாகனங்களுக்கு (charge point operators (CPOs)) சார்ஜிங் பாயிண்ட்கள் வழங்கும் நிறுவனங்கள் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜி.பி.எஸ். வசதியுடன் கூடிய இந்த செயலி மூலம் அருகில் உள்ள சார்ஜிங் பாயிண்ட்களை எளிதில் அடையாளம் காண முடியும்.
https://play.google.com/store/apps/details?id=com.ev.yatra - என்ற லிங்க் மூலம் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து ’EV Yatra’ செயலியை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.