கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை ராணுவத்தில் பணியாற்றியபோது, போரில் கணவரை இழந்த பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 66 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் கடற்படையில் பணியாற்றியபோது, போரில் கணவரை இழந்த பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 28 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2017-2018-ம் ஆண்டு முதல் 2021-22-ம் ஆண்டு வரை விமானப்படையில் பணியாற்றியபோது, போரில் கணவரை இழந்த பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 19 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் படைவீரர்களுக்கான நலத்திட்டத்தின் கீழ் பல்வேறு உதவிகள் வழங்கப்படுகிறது.
அவர்களுடைய குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையும், கணவரை இழந்த பெண்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பு வரையிலும், மாதம் 1,000 ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மாதம் 3,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மகள்களின் மணத்திற்காகவும் (2மகள்கள் வரை), கணவரை இழந்தப் பெண்களின் மறுமணத்திற்காகவும், ரூ. 50,000 அளிக்கப்பட்டுள்ளது. இவை கொடிநாள் நிதியின் கீழ் வழங்கப்பட்டது.
இத்தகவலை பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய்பட் மாநிலங்களவையில் டாக்டர் சாந்தனுசென் அபிர் ரஞ்சன் பிஸ்வாஸ் ஆகியோருக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.