ஸ்பைஸ்ஜெட் (SG-036) விமானம் சவூதி அரேபியாவின் ஜெட்டாவிலிருந்து கோழிக்கோடுக்கு 6 பணியாளர்கள் உட்பட 197 பயணிகளுடன் வந்தது. ஹைட்ராலிக் கோளாறு காரணமாக கொச்சி சர்வதேச விமான நிலையத்தில்  அவசர அவசரமாகத் தரையிறக்க முடிவு செய்யப்பட்டது.


இதையடுத்து மாலை 6.30 மணிக்கு கொச்சி விமான நிலையத்தில் முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இரவு 7.19 மணிக்கு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.


இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
ஸ்பைஸ்ஜெட் 737 மேக்ஸ் விமானம் கோழிக்கோடு நகருக்கு ஜெட்டா நகரிலிருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட பைலடர் கண்டறிந்தனர்.


இதையடுத்து, விமானத்தை தரையிறக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த கொச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை அவர்கள் தொடர்பு கொண்டனர். விமான நிலைய ஏர் டிராஃபிக் கட்டுப்பாட்டு அறையில் ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொச்சி விமான நிலையத்தில் அந்த விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "ஸ்பைஸ்ஜெய் பி737 ரக விமானம் ஜெட்டா நகரிலிருந்து புறப்பட்ட உடன், அந்த விமான நிலைய கட்டப்பாட்டு அதிகாரிகள் விமானத்தின் டயர் துகள்கள் ஓடுதளத்தில் இருந்ததாக பைலட்டுக்கு தெரியப்படுத்தினர்.


அதைத் தொடர்ந்து எச்சரிக்கை விளக்கும் பைலட் அறையில் ஒளித்தது. இதைத்தொடர்ந்து பைலட்டுகள் கொச்சி விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க முடிவு செய்தனர். ஹைட்ராலிக் சிஸ்டம் பழுதானது கண்டறியப்பட்டது. அங்கிருந்து மும்பை கொண்டுவரப்பட்டு பழுது நீக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது" என்றார்.


முன்னதாக, புதிய பாம்பன் பாலத்தின் 84% கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளதாக மித்திய ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. விரைவில் இந்த பாலம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


பாம்பன் ரயில் பாலம் ஆங்கிலேயர்கள் நமக்கு விட்டுச் சென்ற அரிய பொக்கிஷம் ஆகும். இந்த பாலத்திற்காக 146 இரும்பு தூண்கள் கடலுக்குள் அமைக்கப்பட்டு, இரண்டாயிரத்து 340 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்ட இந்த பாலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபத்தையும் பாம்பன் தீவையும் இணைக்கிறது. இந்துக்களின் புனித தலமாக கருதப்படும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் பாம்பன் தீவில்தான் அமைந்துள்ளது.


இந்தியா முழுவதிலும் இருந்து ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் கடல் பாலத்தை கடந்து தான் ராமேஸ்வரத்தை அடைய முடியும். 1876இல் ஆங்கிலேயர்கள் இந்தியா-இலங்கை இடையே போக்குவரத்திற்கான இணைப்பை ஏற்படுத்த முடிவு செய்தனர். கீழே கப்பலும், மேலே ரயிலும் செல்லும் வகையில் 1899ஆம் ஆண்டில் டபுள் லீப் கேண்டிலிவர் பிரிட்ஜ் பாலம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக 1902ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசால் முறையான அறிவிப்பும் செய்யப்பட்டது. வர்த்தக போக்குவரத்திற்காகவே பாம்பன் கடலில் பாலம் கட்ட பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது. 


ரயில்கள் செல்வதற்காக பாலம் கட்டப்பட்டால் கப்பல் போக்குவரத்து தடைபடும் என கருத்தில் கொண்டு ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து இரண்டும் தடைபடாதவாறு கட்டப்பட்ட பாலம் தான் பாம்பன் பாலம். இந்த பாலமானது பெரிய கப்பல்கள் வரும்போது தூக்கப்பட்டு வழிவிடும் வகையில் கட்டப்பட்டுள்ளது.