யானைகளுக்கும் அதை வளர்க்கும் பாகன்களுக்கும் எப்போதும் அளவுகடந்த அன்பு இருக்கும். அவை சில நேரங்கள் அந்த யானை செய்யும் செயல்களால் வெளிப்படும். அத்துடன் தன்னுடைய பாகன் இல்லாத போது அவரை தேடும் யானையின் செயலும் இதை சுட்டிக்காட்டும். அந்தவகையில் யானை ஒன்று, தன்னை வளர்த்த பாகன் மரித்த நிலையில் அவருக்கு இறுதியாக அஞ்சலி செலுத்தவந்துள்ளது. 

Continues below advertisement

கேரள மாநிலத்தில் உள்ள மலை கிராமத்தில் வசிந்து வந்த பாகன் ஒருவர் திடீரென உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்திருப்பதாக தெரிகிறது. அவருடைய மறைவை தொடர்ந்து அந்தக் குடும்பம் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அதே சமயம் அவர் வளர்த்த யானையும் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த யானை தன்னுடைய பாகனுக்கு இறுதி அஞ்சலி செய்யும் காட்சிகளை அதை தெளிவாக நமக்கு உணர்த்துகின்றன. யானையின் இந்தச் செயலை ஒருவர் வீடியோ எடுத்து தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

 

Continues below advertisement

இந்த வீடியோ பார்ப்பவர்களை மிகவும் உணர்ச்சிவசம் அடையை வைக்கும் வகையில் உள்ளது. அதில் வெளியே வைக்கப்பட்டுள்ள தனது பாகனின் உடலை காண வந்த யானை தனது தும்பிக்கையை தூக்கி சத்தம் எழுப்பும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதை காணும்போது அந்த பாகனுக்கும் யானைக்கும் எந்த அளவிற்கு உறவுப்பிணைப்பு இருந்திருக்கும் என்று நம்மால் உணர முடிகிறது. விலங்குகளுக்கு 5 அறிவுதான் என்றாலும் அவை தம்மை வளர்த்தவர்களுக்கு விசுவாசமாக இருக்கும். அந்த வகையில் தன்னை வளர்த்தவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி தன்னுடைய அன்பை, இந்த யானை வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.