யானைகள் பிடிக்காத மனிதர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். நேரில் பார்க்கும்போதும் வீடியோக்களிலும் யானைகளும் அவற்றின் மெதுமெதுவான அசைவுகளும் நமக்கு என்றுமே சலிப்பூட்டுவதே இல்லை!


 பொதுவாக மனிதர்களைப் போலவே கும்பலாக வலம் வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ள யானைகள் சாப்பிடுவது, குளிப்பது, சேற்றில் விளையாடுவது, மனிதர்களுடன் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்வது என அவற்றின் ஒவ்வொரு க்யூட்டான செயல்களும் சமூக வலைதளங்களில் ஹிட் அடித்து லைக்ஸ் அள்ளி வருகின்றன. 


அந்த வகையில் முன்னதாக யானைக்கூட்டம் ஒன்று வனப்பகுதியில் மத்தியில் அமைக்கப்பட்ட செயற்கைக் குளம் ஒன்றில் குட்டியுடன் குடும்பமாக குளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.






பிரவீன் கஸ்வான் எனும் வனத்துறை அலுவலர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ ட்விட்டரில் லைக்ஸையும் கமெண்டுகளையும் அள்ளி வருகிறது.


இதேபோல் முன்னதாக வயல்வெளியில் சேற்றில் மாற்றிக்கொண்ட யானைக்கு பெண் ஒருவர் உதவும் வீடியோ முன்னதாக இணையவாசிகளின் இதயங்களை வென்று வருகிறது.


சேற்றில் சிக்கித் திணறியபோது தனக்கு உதவிய பெண்ணுக்கு வெளியே வந்ததும் யானை நன்றி தெரிவிக்கும் வகையில் தும்பிக்கையை தூக்கிக் காண்பிப்பதும் இந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.


ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது. இதேபோல் முன்னதாக  டூரிஸ்ட் பஸ் ஒன்றை நிறுத்தி அதில் யானை ஏற முயற்சிக்கும் வீடியோ நெட்டிசன்களைக் கவர்ந்துள்ளது.


Watch Video: உதவிய பெண்ணுக்கு தும்பிக்கையைத் தூக்கி நன்றி தெரிவித்த யானை! - வீடியோ வைரல்


திபன்ஷா கப்ரா எனும் ஐபிஎஸ் அலுவலர் இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள நிலையில், யானையின் க்யூட்டான செய்கை இணையவாசிகளைக் கவர்ந்து லைக்ஸ் அள்ளி வருகிறது. 


இதேபோல் முன்னதாக பானிபூரி கடை ஒன்றில் நின்று சரசரவென அடுத்தடுத்து பானிபூரிகளை யானை ஒன்று சாப்பிடும் வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆனது.






அஸ்ஸாம் மாநிலம், தேஸ்பூரில் இந்த வீடியோவில், பாகனும் வரும் யானை, அடுத்தடுத்து பானிபூரிகளை தும்பிக்கையை நீட்டி கேட்டு வாங்கி உண்ணும் வீடியோ இணையத்தில் சரமாரியாக லைக்ஸ் அள்ளியது.