2024 நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாநில காவல் அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.


தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் நிக்கோபாரின் மாநில தேர்தல் அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் மூத்த துணை தேர்தல் ஆணையர் தர்மேந்திர ஷர்மா, மூத்த துணை தேர்தல் ஆணையர் நிதேஷ் வியாஸ்,  துணை தேர்தல் ஆணையர் மனோஜ்குமார் சாஹூ, தேர்தல் ஆணைய இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவட்சவா, ஆகியோர்  இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளனர். தமிழ்நாடு சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.