Vechile Road Tax: தமிழ்நாட்டில் வாகனங்களுக்கான திருத்தப்பட்ட புதிய சாலை வரி தொடர்பான அரசாணை வெளியாகியுள்ளது.


வாகனங்களுக்கான சாலை வரி உயர்வு:


தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, சரக்கு வாகனங்கள், வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள், பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள், ஆம்னி பேருந்துகள், அனைத்து வகை புதிய மற்றும் பழைய இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் வாகனங்கள், கட்டுமானத்திற்கு பயன்படும் வாகனங்கள், கார்கள் மற்றும் டாக்சிகள் என அனைத்து வகை மோட்டார் வாகனங்களுக்கும் திருத்தப்பட்ட புதிய வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


புதிய வரி விவரம்:


பயணிகள் போக்குவரத்து, வாடகை வாகனங்களுக்கு 5 ஆண்டு வரியாக ரூ.1,400 முதல் ரூ.6,000 வரை பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் வரி உயர்த்தப்படுகிறது. புதிய இருசக்கர வாகனங்களுக்கான வாழ்நாள் வரி அதன் விலை ஒரு லட்ச ரூபாய் என்றால் அதில் 10 சதவிகிதமும்,  வாகனத்தின் விலை ரூ.1 லட்சத்துக்கு மேல் இருந்தால் 12 சதவீதமும் வரியாக  வசூலிக்கப்படும். பழைய இருசக்கர வாகானங்களுக்கு அதாவது  ஒருவருட பழையது எனில் ரூ.1 லட்சம் வரையிலான விலையில் 8.25 சதவிகிதமும், ரூ. 1 லட்சத்திற்கும் மேல் விலை இருந்தால் 10.25 சதவிகிதமும், 2 ஆண்டு வரை வாகனம் பழையது என்றால் ரூ.1 லட்சம் வரையிலான விலையில் 8 சதவிகிதமும், ரூ. 1 லட்சத்திற்கும் மேல் விலை இருந்தால் 10 சதவிகிதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது.


வாடகை பயணிகள் போக்குவரத்து வாகனங்களில், சுற்றுலா மற்றும் ஒப்பந்த வாகனங்களுக்கு காலாண்டு வரி ரூ.4,900-ஆகவும், 35 பேருக்கு மேல் பயணித்தால் இருக்கைக்கு ரூ.3 ஆயிரமும், படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையிலும் வரி உயர்கிறது. சென்னை, மதுரை, கோவை போன்ற நகர சுற்றுப்பகுதிகளில் இயக்க அனுமதிக்கப்பட்ட பிரத்யேக பேருந்துகளுக்கு மேல்வரி விதிக்கப்பட்டுள்ளது.


அதோடு, 15 ஆண்டுகள் நிறைவடையாத இருசக்கர வாகனங்களுக்கு, 5 ஆண்டுகளுக்கான பசுமை வரி ரூ.750, மற்ற மோட்டார் வாகனங்களுக்கு ரூ.1,500 என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வாகனங்களுக்கான சாலை பாதுகாப்பு வரி இருசக்கர வாகனங்களுக்கு ரூ.375, இலகுரக வாகனங்களுக்கு ரூ.2,250, மற்ற வாகனங்களுக்கு ரூ.3 ஆயிரம் என தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ளது. 


வாகன வரியில் மாற்றம் ஏன்?


தமிழ்நாட்டில் உள்ள 150 வட்டார  போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் யூனிட் அலுவலகங்களில் தினசரி, பைக் மற்றும் கார் என சுமார் 8 ஆயிரம் வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அப்போது, அந்த வாகனங்களின் விலையின் அடிப்படையில் அவற்றிற்கு  வரி விதிக்கப்படுகிறது. கடந்த 2010ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டதன்படி, இருசக்கர வாகனங்களுக்கு 8 சதவிகிதமும், கார்களின் வகைகளுக்கு ஏற்றாற் போல் 10 முதல் 15 சதவிகிதமும் வரி வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக போக்குவரத்து ஆணையரகத்தின் பரிந்துரையின் பேரில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு வாகனங்களுக்கான சாலை வரி உள்ளிட்டவற்றை தமிழ்நாடு அரசு நள்ளிரவு முதல் உயர்த்தியுள்ளது. இதனால் கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் விலை தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI