தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் பதிவு நீக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவலை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பதிவு செய்து செயல்படாமல் இருந்த 86 கட்சிகளை பட்டியலில் இருந்து தலைமை தேர்தல் ஆணையம் நீக்கியது.
தேர்தல் விதிகளை பின்பற்றத் தவறியதற்காக தேர்தல் குழுவால் சிவப்புக் கொடியிடப்பட்ட அமைப்புகளின் எண்ணிக்கையை 537 ஆக உயர்ந்துள்ளது. தேர்தல் ஜனநாயகத்தின் "தூய்மை"க்காகவும், பொது நலனுக்காகவும் "உடனடியான திருத்த நடவடிக்கைகள்" எடுக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. எனவே கூடுதலாக 253 பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலை வெளியிட்டது.
தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் கமிஷனர் அனுப் சந்திர பாண்டே ஆகியோர் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
"RP சட்டத்தின் பிரிவு 29A இன் கீழ் சட்டப்பூர்வ தேவைகளின்படி, ஒவ்வொரு அரசியல் கட்சியும் அதன் பெயர், தலைமை அலுவலகம், அலுவலக பணியாளர்கள், முகவரி, பான் எண் ஆகியவற்றில் ஏதேனும் மாற்றம் இருந்தால் தாமதமின்றி கமிஷனுக்கு தெரிவிக்க வேண்டும்" என்று ECI ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நிதி ஒழுக்கம், பொதுப் பொறுப்புக்கூறல் மற்றும் உரிமையைப் பேணுவதற்காக பதிவு செய்யப்படாத 2,100 கட்சிகளுக்கு எதிராக கடந்த மே மாதம் முதல் தேர்வு குழு நடவடிக்கையை தொடங்கியது. இதில், நிராகரிக்கப்பட்ட 1968 ஆம் ஆண்டு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆணையின் கீழ் அனைத்து சலுகைகளையும் தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றது.
டெல்லி, பீகார், உத்தரபிரதேசம், தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் இருந்து தலைமை தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
அதன்படி, தமிழ்நாட்டில் செயல்படாத 7 கட்சிகளின் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. கொங்குநாடு ஜனநாயக கட்சி, மக்கள் மறுமலர்ச்சி முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் தொண்டர்கள் கட்சி, தேசபக்தி, புதிய நீதிக்கட்சி, தமிழ் மாநில காயிதே மில்லத் கழகம், தமிழர் கழகம் ஆகிய கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நடிகர் டி.ராஜேந்தரின் 'இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்' செயல்படாத கட்சி என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.