நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் 21 ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. உடல் நலக்குறைவால் கடந்த மாதம் இந்த வழக்கின் விசாரணைக்கு சோனியா காந்தி ஆஜராகாத நிலையில் அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
வழக்கு:
நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் கடந்த 2010ஆம் ஆண்டு கைப்பற்றியது. நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை, யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ஆஜர்:
7 ஆண்டுகள் பழமையான வழக்கில் ஆஜராகுமாறு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ராகுல் காந்தி நாளையும், சோனியா காந்தி ஜூன் 8 ஆம் தேதியும் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிருவனத்தை ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி நிறுவனத்தின் யங் இந்தியா கைப்பற்றியதல் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதையடுத்து அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை அபகரித்து விட்டதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வருமான வரித்துறை சோதனை:
அதையடுத்து புகார் தொடர்பாக யங் இந்தியா நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது 2011-12 ஆம் ஆண்டில் வருமானம் குறைவாக காட்டப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்தது. அதை எதிர்த்து ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி இருவரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் வருமான வரி கணக்கை ஆய்வு செய்ய, வருமான வரித்துறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்