வாங்கும் சம்பளத்திற்கு ஏற்ற வேலையை பார்க்காமல் ஓப்பியடிக்கும் பலருக்கு மத்தியில், தான் பார்த்த வேலை தனக்கு திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி, தனது 33 மாத கால சம்பளத்தை திருப்பி அளித்துள்ளார் கல்லூரி உதவி பேராசிரியர் . முசாபர்பூரில் உள்ள பி ஆர் அம்பேத்கர் பீஹார் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் லாலன்குமார். மாணவர்கள் கல்லூரிக்கு சரியாக வருகை தராததால், சரியாகப் பாடம் எடுக்கவில்லை எனக் கூறி தான் இதுவரை பெற்ற தனது 33 மாத சம்பளத்தை திருப்பி அளித்துள்ளார். 


நடந்தது என்ன ?




பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ளது பி ஆர் அம்பேத்கர் பீகார் பல்கலைக்கழகம். இங்கு ஹிந்தி உதவிப் பேராசிரியராக பணிபுரிபவர் லாலன்குமார். இவர் கடந்த 2019 செப்டம்பர் மாதம் முதல் இங்கு பணிபுரிந்து வருகிறார். 2020-ஆம் ஆண்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிக் கல்லூரிகள் அனைத்தும் மூடி இருந்த நிலையில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றன.  தொடர்ந்து பணிபுரிந்து வந்த இவர், தான் பெற்ற 33 மாத கால சம்பளமான 23,82,228 ரூபாய்க்காண காசோலையை பல்கலைக்கழகத் துணை  வேந்தருக்கு கடிதத்துடன் இணைத்து அனுப்பியுள்ளார்.


பேராசிரியர் தரப்பு விளக்கம் :


இது தொடர்பாக உதவி பேராசிரியர் லாலன்குமார் கூறியுள்ளதாவது, நான் மாணவர்களுக்கு சரியாகப் பாடம் எடுக்கவில்லை. கொரோனா காலக்கட்டத்தின் போது ஆன்லைன் வகுப்புகளில் இந்தி வகுப்புகளுக்கு வெகு குறைவாகவே மாணவர்கள் வந்தனர். நான் சிறப்பாக பாடம் எடுக்க வேண்டும் என்று எண்ணி இருந்த போதிலும், என்னால் எனது கடமைகளை சரியாக செய்ய முடியவில்லை. அப்படி இருக்கும் நிலையில் அதற்கான சம்பளத்தை மட்டும் நான் முழுவதுமாக ஏற்றுக்கொள்வது தர்மத்தை பின்பற்றுவதாக இருக்காது. அதனால் செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை தான் பெற்ற சம்பளத்தை திருப்பி அளிப்பதற்காகக் கூறியுள்ளார். பேராசிரியரின் இந்த கன்னியமான செயலுக்கு பலதரப்பினரும் தன் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண