Delhi Earthquake : டெல்லியை நடுங்க வைத்த நிலநடுக்கம்..! அலறியடித்து ஓடிய மக்கள்..!

நேபாள நிலநடுக்க தாக்கத்தால் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

Continues below advertisement

நேபாளத்தில் சக்தியாவ்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நேபாளத்தில் இது ரிக்டர் அளவு கோலில் 5.4ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் வீட்டில் இருந்த பொருட்கள் கீழே விழுந்து உருண்டு விழுந்தன. இதனால் சத்தம் கேட்டு அலறி அடித்து வீடுகளில் இருந்து மக்கள் வெளியேறினர்.

Continues below advertisement

நிலநடுக்கம் :

கதவுகள், ஜன்னல்கள் ஆடியது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. டெல்லி, நொய்டா, குருகிராம், பரிதாபாத்தில் 54 நொடிகள் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லியில் ஏற்பட்ட நிலநடுக்கம் 1 நிமிடத்திற்கு நீடித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. மேலும் சில பகுதிகளில் மீட்பு பணிகளை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


முன்னதாக, நேபாளத்தின் மேற்கே டோடி மாவட்டத்தில் கடந்த வாரம்  அடுத்தடுத்து சக்திவாய்ந்த 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்தனர். இது கைராகாவன் பகுதியில் ஏற்பட்டு உள்ளது. இதன் தாக்கம் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பிற பகுதிகளிலும் உணரப்பட்டன.

மக்கள் பீதி :

தலைநகர்  டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தோர், அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு, குழந்தைகளுடன் வெளியே ஓடி வரும் அளவுக்கு பெரும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. நிலநடுக்கவியல் மைய தகவலின்படி, ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற அளவில் ஏற்பட்ட வலுவான நில நடுக்கத்தின் அதிர்வுகள்தான், டெல்லியில் உணரப்பட்டன என்பது தெரியவந்துள்ளது.

Rain Alert : அடுத்த 3 மணி நேரம்...! 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு...! எச்சரித்த வானிலை ஆய்வு மையம்..

தலைநகர் டெல்லி, அதன் சுற்றுப்புற நகரங்களான நொய்டா, குருக்ராம், காஜியாபாத் உள்ளிட்ட பல பகுதிகள், நேற்று நள்ளிரவில் சரியாக இரவு 1.58 மணியிலிருந்து 2.08 மணி வரை பெரும் பரபரப்புக்கு உள்ளானது. வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் திடீரென அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதற்குக் காரணம், நேபாள நாட்டின் எல்லைப்பகுதியை மையமாக வைத்து பதிவான நில நடுக்கம்தான். 

BJP Annamalai : வணக்கம் மோடி ஹேஷ்டேக் ட்ரெண்டிங்..! மக்களின் பேரன்பினாலே இது சாத்தியம் - அண்ணாமலை

தரைக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில், ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள்தான், டெல்லி, லக்னோ உள்ளிட்ட பல வடமாநில நகரங்கள் மற்றும் ஊரகப்பகுதிகளில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளன. சுமார் 3 முதல் 10 வினாடிகள் வரை இந்த நில அதிர்வுகள் டெல்லியில் உணரப்பட்டுள்ளன. ஆனால், இந்த நில அதிர்வு ஏற்படுத்திய பயத்தால், விடியற்காலை வரை, பொதுமக்கள் தங்கள் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, வீதிகளில் நின்றுக் கொண்டிருந்ததாக, டெல்லிவாசிகள் தெரிவித்தனர்.

 

Continues below advertisement