பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் பெற்ற பரிசுகள் மற்றும் நினைவுச்சின்னங்களை மத்திய கலாச்சார அமைச்சகம் இன்று முதல் மின்- ஏலத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.


இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தன்னுடைய 71 வது பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில், மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம் பிரதமர் பெற்றுள்ள பரிசுகள் மற்றும் நினைவுச்சின்னங்களை இன்று முதல் அக்டோபர் 7 ஆம் தேதி வரை மின் ஏலத்திற்கு விட திட்டமிட்டுள்ளது. இதில்  சமீபத்தில் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெற்ற நீரஜ் சோப்ராவின் ஈட்டி உள்ளிட்ட 1300 பொருட்கள் இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின் ஏலம் விடப்படவுள்ள நினைவுப்பரிசுகளில் ஒலிம்பிக் மற்றும் பாராஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்கள் அளித்த விளையாட்டு சாதனங்கள், உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமருக்கு வழங்கிய அயோத்தி ராமர் மந்திரத்தின் பிரதி மற்றும் உத்தரகாண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் சத்பால் மகராஜாவால் வழங்கப்பட்ட சர்தாமின் மரபிரதி ஆகியவையும் இந்த மின் ஏலத்தில் இடம் பெறவுள்ளது.


 






குறிப்பாக மத்திய கலாச்சாரத்துறை ஏற்பாடு செய்துள்ள மின் ஏலத்தில் ரூ.15 லட்த்திற்கு லக்கேரா அணிந்த டி- ஷர்ட், சுமித் ஆன்டில் மற்றும் நீரவ் சோப்ராவின் ஈட்டியின் அடிப்படை விலை ரூ.1 லட்சம் மற்றும்  குத்துச்சண்டை லோவ்லினா போர்கோஹைனின் கையுறை என சுமார் கோடிக்கணக்கு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


எனவே இந்த ஏலத்தில் கலந்துக்கொள்ள விருக்கும் நபர்கள் அல்லது அமைப்புகள் https://pmmementos.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக இன்று முதல் ( செப்டம்பர் 17 ) முதல் அக்டோபர் 7 ஆம் தேதி வரை பங்கேற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த மின் ஏலத்தில் இருந்து பெறப்படும் பணம் முழுவதும் கங்கை நதியை பாதுகாக்கும் மற்றும் புதுப்பிக்கும் நமாமி கங்கை திட்டத்துக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டு முதல் இந்திய பிரதமரான பிறகு, 2015, 2019 ஆம் ஆண்டில் இரண்டு முறை என மொத்தம் இதுப்போன்று மூன்று ஏலங்கள் மத்திய கலாச்சார அமைச்சகத்தின் மூலம் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தின் மூலம் 15.13 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது.