Viral Kerala : 'என்ன? பெட்ரோல் கம்மியா இருக்கு'.. ரூ.250 அபராதம் போட்ட போலீசார்! ஷாக்கான ப்ரோ..

போதுமான அளவு பெட்ரோல் இல்லாமல் வண்டு ஓட்டியுள்ளதாக வாகன ஓட்டிக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்

Continues below advertisement

சாலை விதிகளை மீறுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதிப்பது வழக்கமான ஒன்றுதான். சொல்பேச்சு கேட்காதவர்கள்கூஉட அபராதத்துக்கு பயந்து விதிகளை கடைபிடிப்பார்கள். இப்போதெல்லாம் ஸ்பாட் ஃபைன் என அந்த இடத்திலேயே அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதத் தொகைக்கு உடனடியாக ரசீதும் வழங்கப்படுவது வழக்கம்.

Continues below advertisement

இந்த ரசீதில் அவ்வப்போது குழப்பம் வரும். பைக் ஓட்டி வருவபவருக்கு சீட் பெல்ட் போடவில்லை என ரசீது கொடுப்பார்கள். ஆட்டோ ஓட்டி வருபவருக்கு ஹெல்மெட் போடவில்லை என ரசீது கொடுப்பார்கள். இப்படியான குழப்பங்களும் ரசீதும் இணையத்தில் வைரலாகும். அப்படியான ஒரு ரசீது கேரளாவில் வைரலாகியுள்ளது. ஆனால் காரணத்தைக் கேட்டால் நிச்சயம் ஷாக் ஆவீர்கள்.


Crime: கடற்கரையில் காணாமல்போன மனைவி.. கதறிய கணவர்.. தீவிரமாக தேடிய அதிகாரிகள்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்



பாசில் ஷ்யாம் என்ற நபருக்கு கொடுக்கப்பட்ட ரசீதில் ரூ250க்கு அபராதம் விதித்துள்ளனர். அதற்கான காரணம்தான் வைரலுக்கு காரணம். போதுமான அளவு பெட்ரோல் இல்லாமல் வண்டு ஓட்டியுள்ளதாக காரணத்தை குறிப்பிட்டுள்ளனர் போலீசார். தன்னுடைய ராயல் என்பீல்ட் பைக்கில் அவசரமாக ஆபிஸ் சென்றுள்ளார். அவர் ஒருவழி பாதையின் எதிர்திசையில் சென்றதால் போலீசார் அவரை மடக்கிப்பிடித்து அபராதம் போட்டுள்ளனர். அலுவலகத்துக்கு தாமதமாகிவிட்டதாக பாசில் கூறியுள்ளார். ஆனால் விதிமீறலுக்காக ரூ.250 அபராதம் செலுத்திவிட்டு ரசீதையும் பெற்றுக்கொண்டு அலுவகலகம் சென்றுவிட்டார். அலுவலகத்துச் சென்றுதான் ரசீதில் போடப்பட்ட காரணத்தை அவர் பார்த்துள்ளார். இது என்ன புதுக்கதை என தனக்கு தெரிந்த சில சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை செய்துள்ளார். ஆனால் இப்படியெல்லாம் விதி இல்லையே எனக்கூறியுள்ளனர்.

பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விளக்கமளித்துள்ளனர். அதில், சரியான அளவு எரிபொருள் இல்லாமல் வாகனம் இயக்குவதற்கு கேரளாவில் அபராதம் உண்டு. ஆனால் அது சொந்த பயன்பாட்டுக்கு இயக்கும் வாகனங்களுக்கு அல்ல. பயணிகளை ஏற்றிச்செல்லும் வாடகை வாகனங்களுக்கு. வாடகை வாகனங்கள் குறிப்பிட்ட அளவு எரிபொருளுடன் செல்ல வேண்டும் என்பதே விதியாகவுள்ளது. மெஷினில் அபராதத்துக்கான விதி எண்ணை டைப் செய்த போலீசார் தவறாக டைப் செய்ததால் இந்த தவறு நடந்துவிட்டதாக விளக்கம் அளித்துள்ளனர்.


50 கோடி ரூபாய் பணம்...5 கிலோ தங்கம்...அமைச்சர் வீட்டில் கொத்து கொத்தாக சிக்கிய பணம்...நாட்டை உலுக்கும் பண மோசடி வழக்கு


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

 

Continues below advertisement