இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் பி-3 ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளதாக டிஆர்டிஓ அறிவித்துள்ளது.

Continues below advertisement

எதிரிகளை மிரள வைக்கும் பி-3 ஏவுகணை:

இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட பி-3 ரக ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் வெற்றிகரமாக சோதித்துப் பார்த்துள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூலில் நடத்தப்பட்ட இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளதாகவும், இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு திறன் மேலும் வலுவடைந்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த ஏவுகணை மேலும் தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

Continues below advertisement

டிஆர்டிஓ அசத்தல் சாதனை:

இந்த மேம்படுத்தப்பட்ட ஏவுகணை மூலம் பலதரப்பட்ட இலக்குகளை குறிவைத்து தாக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையை தரை மட்டும் விமானம் மூலம் செலுத்த முடியும். பகல் மற்றும் இரவு நேரங்களில் இலக்குகளை குறிவைத்து தாக்கும் வசதி கொண்டுள்ளது என்பதுடன், இலக்குகளை தாக்கிய பின்னர் அல்லது இலக்குகள் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் வகையில் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரூவில் உள்ள புத்தொழில் நிறுவனமான நியூஸ்பேஸ் ரிசர்ச் டெக்னாலஜிஸ் நிறுவனம், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து உள்நாட்டிலேயே இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இந்த ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்ததற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் பாதுகாப்பு சாதனங்களை உள்நாட்டிலேயே வடிவமைத்து உற்பத்தி செய்யப்படுவதற்கு இது ஒரு சான்றாகும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.