இண்டர்நெட் என்பது சுவாரஸ்யமான, கவர்ச்சிகரமான மேலும் வித்தியாசமான வீடியோக்களின் களஞ்சியமாகும். இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என விநோதமான பல வீடியோக்கள் இங்கே கொள்ளையாகக் கொட்டிக்கிடக்கின்றன. அண்மையில் பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் ஒரு விசித்திரமான விலங்கு கேமராவில் சிக்கிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. வீடியோவில், விலங்கு பராமரிக்கப்படாத ஒரு அறையை அங்கும் இங்கும் சுற்றி வருகிறது. அது வேகமாக சுவர் ரேக்கில் ஏறியது. சிலர் அதை நாய் என்று அழைத்தனர், சிலர் இது ஒரு மங்கூஸ் என்று நினைத்தார்கள். மற்றவர்கள் அது என்ன விலங்கு என்று குழப்பமடைந்து தடுமாறினர். இதனிடையே அந்த வினோத விலங்கைப் பார்க்க ஏராளமானோர் அங்கு திரண்டனர்.






கமெண்ட் பகுதியில் மக்கள் மாறி மாறி அது என்ன விலங்கு எனக் கணித்து வருகின்றனர்.. ஒரு பயனர் கமெண்ட் செய்கையில் "ரோமங்கள் இல்லாத சிவெட் பூனை?" என்று எழுதினார். "இது சுப்பாகாப்ரா என்று நான் நினைக்கிறேன்." என்று மற்றவர் கூறியுள்ளார். மூன்றாவதாக எழுதியவர்,"குட்டே கா கப்தா உத்தர தியா ஹை கிசி நே" என்று நகைச்சுவையாகச் சொன்னார்.அதாவது நாயின் மேலாடை கீழே விழுந்துவிட்டதா என நக்கலாகக் கேட்டார். "முடிகள் இல்லாத கழுதைப்புலி,", நாய், பாம்பு அல்லது குள்ளநரியின் கலவை" போன்ற மற்ற கருத்துக்களும் அங்கே இடம்பெற்றிருந்தது.