கேரளத்தின் சூப்பர் ஸ்டார் எருமை வேலு; 40 லட்சம் கேட்டு விற்க மறுத்த உரிமையாளர்; அப்படி என்ன ஸ்பெஷல்?

5.5 உயரத்தில், 8.5 அடி நீளமும், 1500 கிலோ எடை கொண்ட இந்த எருமையினை பார்ப்பதற்கே வியப்பாய் உள்ளநிலையிலும்  கேரளத்திற்கே செல்லப்பிள்ளையாக உள்ளது எருமை வேலு.

Continues below advertisement

கேரளத்தில் 1500 கிலோ எடைகொண்ட வேலு என்ற எருமை தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தினைக் கொண்டுள்ளது. அனைவருக்கும் செல்லப்பிள்ளை போன்று வலம் வரும் இந்த எருமையினை 40 லட்சம்  கொடுத்து வாங்க முயன்றும் உரிமையாளர் அன்வர் தர மறுத்துள்ளார்.

Continues below advertisement

ஆசையோடு வளர்த்த எந்தவொரு செல்லப்பிராணிகளையும் விற்பது அனைவருக்கும் வருத்தமான விஷயம் தான். அதுவே ஊர் மக்கள் அனைவரும்  நம் செல்லப்பிராணிகளை தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடினால் சொல்லவா வேண்டும்? விற்பது என்ற வார்த்தையையே நம் காதுகள் கேட்காது. அப்படி தான் கேரளத்தில் சூப்பர் ஸ்டாராக ஊர் மக்களுக்கு செல்லப்பிள்ளையாக வளர்ந்து வருகிறார் வேலு என்ற எருமை. அப்படி என்னதான் இந்த வேலு கிட்ட ஸ்பெஷல் இருக்குதுன்னு நாமும் தெரிஞ்சுக்கலாம் வாங்க…

வடமாநிலங்களில் முர்ரா ரக எருமை வகைகள் அதிகம் காணப்படும். ஆனால் கேரளத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதியன்று முர்ரா ரக எருமைக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. இதனை கேரள மாநிலம் கொல்லத்திற்கு உட்பட்ட ஒட்டக்குழிக்கு அருகே உள்ள கில்லி கொல்லூர் பகுதியினைச் சேர்ந்த அன்வர் என்பவர் தனது நண்பரிடம் இருந்து 6 மாத குட்டியாக வாங்கியுள்ளார். தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்ற அவர் இதற்கு வேலு  என்ற பெயரிட்டதுன் ஆசையாய் வளர்த்து வருகிறார். 5.5 உயரத்தில், 8.5 அடி நீளமும், 1500 கிலோ எடை கொண்ட இந்த எருமையினை பார்ப்பதற்கே வியப்பாய் உள்ளநிலையிலும்  கேரளத்திற்கே செல்லப்பிள்ளையாக உள்ளது.

ஆம் கேரளத்தில் யானைகளை ஆசையோடு வளர்த்து அதன் கழுத்தில் அதன் பெயர் எழுதிய டாலர்களை தொங்கவிட்டு அழகு பார்ப்பார்கள். இதோடு கேரளத்தில் கோவில் நிகழ்ச்சிகள் நின்றால் யானைகள் இல்லாமல் இருக்காது. அப்படி தான் பார்ப்பதற்கு பிரம்மாண்டமாய் இருக்கும் இந்த வேலு என்ற எருமைக்கும் அதன் பெயர் மற்றும் பிறந்த தேதியினை எழுதிய டாலர் கழுத்தில் தொங்கவிடப்பட்டு உரிமையாளர் அன்வர் அழகு பார்க்கிறார். இதோடு திருவிழாக்களிலும் கலந்து கொண்டு மக்களிடம் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது வேலு. இதனால் இதற்கென்று தனி ரசிகர் பட்டாளமே வேலுவிற்கு உள்ளது என்று கூறலாம். அந்த அளவிற்கு அனைவரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளது. இதோடு மட்டுமின்றி ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும் ரசிகர்கள் வேலுவின் இடத்திற்கு வந்து கேக்வெட்டி கொண்டாடுவார்கள். இதில் அரசியல் கட்சித்தலைவர், எம்.எல்.ஏகள் என அனைவரும் கலந்து கொள்வார்கள். தற்பொழுது வேலுவிற்கு 6 வயதாகிறது. கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் வேலுவின் பிறந்த நாள் இந்தாண்டு சிறப்பாக கொண்டாடப்படவில்லை.

இந்த வேலு தினமும் 40 கிலோ தர்ப்பூசணி சாப்பிடுமாம். இப்பழம் இல்லாத பொழுது பலாப்பழம் சாப்பிடும். இதோடு ஏராளமான அவித்த முட்டைகள், மீன் எண்ணெய் ஆயுர்வேத மருந்துகளும் யானையின் டயட்டில் இடம் பெற்றுள்ளது. புல்லினை விரும்பிச்சாப்பிடுவதில்லை. இந்நிலையில் வேலுவின் டயட்டிற்கு மட்டும் தினமும் 2 ஆயிரம் ரூபாய் வரை அன்வர் செலவழிக்கிறார். அதற்கு என்னென்ன தேவைகளோ அத்தனையும் வாங்கி கொடுத்து தன் வீட்டில் ஒருவரைப்போல் பராமரித்து வருகிறார். இந்நிலையில் தான்  இந்த வேலுவினை காசர்கோட்டை சேர்ந்த கால்நடை பண்ணை உரிமையாளர் வாங்க முயற்சிக்கிறார். இதற்காக 40 லட்சம் தருகிறேன் இந்த வேலுவினை எங்களிடம் கொடுத்து விடுங்கள் என்று கேட்டும் உரிமையாளர் அன்வர் மறுத்துள்ளார். இவர் மட்டுமில்லை பலரும் வேலுவினை  வாங்க முயற்சிச் செய்வது குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதும் வீட்டின் செல்லப்பிள்ளை, கேரளத்தின் சூப்பர் ஸ்டாரான வேலுவினை விற்க அன்வருக்கு மனம் இல்லை. பணத்தினை விட பாசம் தான் முக்கியம் என எருமை வேலுவும், அன்வரும் அவர்களின் அன்றாட வாழ்வினை தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றனர். குறிப்பாக கோவில் விழாக்களுக்கு அழைத்து செல்வதால், அதன் புகழ் மேலும் பரவ துவங்கியது. மேலும் குழந்தைகள் அதன் மேல் ஏறி அமர்ந்து போட்டோ எடுக்க போட்டி போடுகின்றனர்... 

Continues below advertisement
Sponsored Links by Taboola