மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவை எம்.பி. வில்சன் தாக்கல் செய்தார். இந்திய அமைப்புச் சட்டம் 200-ல் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக தனிநபர் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய அவர், சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுத்து ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கோரி மசோதாவை தாக்கல் செய்தார்.
முன்னதாக, திமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் ஏற்கனவே ஆளுநர் ஆர்.என். ரவி நிலுவையில் உள்ள மசோதாக்கலுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது குறித்து மக்களவையில் கவனப்படுத்தினார்கள். எம்.பி. டி. ஆர். பாலு தமிழ்க ஆளுநரை திரும்பபெற வேண்டும் என்று மக்களவையில் பேசியிருந்தார்.
தமிழ்நாட்டில் திமுக பொறுப்பேற்று, சட்டமன்ற கூட்டத்தொடரில் நீட் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் இயற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நீட் உள்ளிட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்பட்ட காரணத்தை, ஏற்கனவே திமுக பலமுறை சுட்டிக்காட்டியுள்ள நிலையில் எம்.பி. வில்சன் தாக்கல் செய்துள்ள தனிநபர் மசோதாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
.....
-----------------
எம்.பி வில்சன் தாக்கல் செய்துள்ள தனி நபர் மசோதாவில், “இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்! ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்துவமான மொழி, கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் முறைகள் இருக்கின்றன.
ஜனநாயகமும் கூட்டாட்சியும் ஒரு அரசியலமைப்பின் அடிப்படையான அம்சங்களில் முக்கியமானவை.
நமது அரசியலமைப்பு சாசனமானது மாறிவரும் நிலைகளுக்கேற்ப, தகவமைத்துக்கொள்ளும் திறன் பெற்றுள்ள வரலாற்று ஆவணமாகும். சமூக தேவைகளுக்கான ஏற்ப அதை வடிவமைக்காவிட்டல் அரசியலமைப்புச் சட்டம் சிதைந்துவிடும்.
இந்திய அரசியலமைப்பு இயற்கையில் மாறும் தன்மை கொண்டது, தேசத்தின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டது. ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி ஆகியவை அரசியலமைப்பின் அத்தியாவசிய அம்சங்களாகவும் அதன் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகவும் உள்ளன.
ஆளுநர் மாநிலத்தின் மக்களின் நலவாழ்விற்கு பொறுப்பேற்று கொண்டவர்.
மாநிலத்தின் சம்பிரதாயத் தலைவராக இருப்பவர், ஆளுநர். அவர் மாநில அரசின் சட்டப்பூர்வ மற்றும் அரசியலமைப்புச் செயல்பாட்டைத் தடுக்க முடியாது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 200வது பிரிவு, சட்ட வரைவுகளுக்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு வழங்குகிறது
மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு, ஆளுநர் இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்ய அல்லது திருத்தங்களை பரிந்துரைக்கலாம். எனினும், இந்த மசோதா மீண்டும் ஒருமுறை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டால், அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பார். ஆனால், ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டிய காலவரையறையை அரசியலமைப்பு தெளிவாக கூறவில்லை.
மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவராக, ஆளுநருக்கு பொறுப்பு உள்ளது. சமீப காலங்களில், மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை சட்டமாக்க அனுமதி வழங்காமல், ஆளுநர்கள் அதிக நேரம் எடுத்துகொள்ளும் பல நிகழ்வுகளை நாம் பார்த்திருக்கிறோம். சில சமயங்களில், குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு முன்வைக்கப்பட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டாலும், ஆளுநர்கள் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டனர். மாநில சட்டமன்றம் மக்களின் ஆணையை பிரதிநிதித்துவப்படுத்துவதால், இந்த தாமதம் சரியானதில்லை. மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட அனைத்து மசோதாக்களும் மாநில மக்களின் நலனுக்காகவே இயற்றப்பட்டதாகும். மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் நடவடிக்கைகளால் மாநில அரசின் செயல்பாடுகளை மறைமுகமாகக் குறைக்க முடியாது. இது அரசியலமைப்பால் நிறுவப்பட்ட யூனியன் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான அதிகார சமநிலையை மீறுகிறது.
அரசியலமைப்பு பிரிவு 200 இல் காலக்கெடு இல்லாதது, ஒரு மசோதா அமல்படுத்துவதை தாமதப்படுத்த ஆளுநருக்கு கட்டுப்பாடற்ற அதிகாரத்தை அளிக்கிறது. காலக்கெடுவை பரிந்துரைக்காதது மக்களின் நலனுக்கு இடையூறாக உள்ளது. மக்களின் நலன்களை சமநிலைப்படுத்தும் வகையில் இந்த விதியை திருத்த வேண்டும், மேலும் ஆளுநருக்கு தகவலறிந்த முடிவெடுக்க போதுமான அவகாசம் வழங்க வேண்டும்.
அரசியலமைப்பின் 200 வது பிரிவைத் திருத்துவதற்கு முன்மொழியப்பட்டு, அந்த மசோதாவிற்கு ஆளுநர் தனது ஒப்புதலை வழங்குவதற்கு அல்லது நிறுத்தி வைப்பதற்கு அல்லது அத்தகைய மசோதாவை இந்தியக் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஒதுக்குவதற்கு ஒரு காலக்கெடுவை பரிந்துரைக்க வேண்டும்.
அரசியலமைப்பின் 200 பிரிவு, திருத்தப்படுகையில், ஆளுநர் மசோதா குறித்து முடிவெடுக்க, 2 மாத காலம் என்பதை குறிப்பிட வேண்டும். இதில் உள்ள, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ என்ற வார்த்தைக்கு பதிலாக, ஒரு மாதக்காலம் என்றும், குடியரசு தலைவரின் பரிந்துரை பகுதியில் மசோத சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மாத காலத்திற்குள், இது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று காலவரையறைகளை குறிப்பிட வேண்டும்.