இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை, அமைச்சர் துரைமுருகன் டெல்லியில் சந்தித்துள்ளார். அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இந்திய அணி கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்தாண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்று ரத்தான ஐபிஎல் தொடரில் சென்னையை அணியை சிறப்பாக வழிநடத்தினார். கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக ரத்து செய்யப்பட்ட ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக தோனி தயார்படுத்தி வருகிறார். இதனிடையே, தனது குடும்பத்தாரிடம் நேரத்தை கழித்து வருகிறார்.




 


WTC Final Preview : நிறைவடைந்த கவுண்டவுன் - இன்று தொடங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் யுத்தம்!


இந்நிலையில், திமுக பொது செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் டெல்லியில் தோனியை சந்தித்துள்ளார்.  இந்தச் சந்திப்பின் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்பியுமான கதிர் ஆனந்தும் உடன் இருந்தார். தோனியுடன் அவரது மனைவி சாக்‌ஷி மற்றும் மகள் ஜீவா ஆகியோர் உடன் உள்ளார். இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றது என்று கூறப்படுகிறது. இந்தப் புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


CM Stalin meet PM Modi: முதலமைச்சர்கள் Vs பிரதமர் மோடி : உருவாகிறதா மாநில அரசுகள் கூடும் மூன்றாவது அணி?