காளி படத்தின் போஸ்டர் குறித்து வெறுப்பை கக்கிய 2,00,000 பேரின் பதிவை நீக்குமா ட்விட்டர் நிறுவனம்? என்று இயக்குநர் லீனா மணிமேகலை கேள்வியெழுப்பியுள்ளார்.


சர்ச்சையான ”காளி”:


எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர், திரைப்பட இயக்குநர் லீணா மணிமேகலை அவரது படைப்புகளுக்கு மட்டுமல்ல சர்ச்சைகளுக்கும் புகழ்பெற்றவர். தமிழ்நாடு அளவில் சர்ச்சைகளுக்குள்ளான அவர், தற்போது இந்திய அளவில் பிரபலமாகியிருக்கிறார். தேவதைகள், பறை, பலிபீடம் ஆகிய ஆவணத் திரைப்படங்களையும், செங்கடல், மாடத்தி ஆகிய திரைப்படங்களையும் இயக்கியுள்ள ஆவணத் திரைப்படம் தான் “காளி”.


இந்த ஆவணப்படத்தின் போஸ்டரை தான் சமீபத்தில் வெளியிட்டிருந்தார் லீணா மணிமேகலை. அந்த போஸ்டரில், காளியின் வேடமணிந்த பெண் ஒருவர் சிகரெட் புகைப்பது போலவும், அவரின் பின்னால் எல்ஜிபிடியினரின் வானவில் கொடியை பிடித்திருப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த போஸ்டருக்கு இந்து அமைப்புகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரை கைது செய்ய வலியுறுத்தி #arrestLeenamanimekalai என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலானது.




வழக்குப்பதிவு:


அவர் மீது உத்தரப்பிரதேசத்தில் 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதே போல டெல்லி மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்திருந்த லீனா, படத்தைப் பார்த்தால் arrest leena manimekalai" என்ற ஹேஷ்டேக் போடாமல் "love you leena manimekalai" ஹேஷ்டேக் போடுவார்கள் என்று கூறியிருந்தார். மேலும் எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலா;ம் என்று லீனா மணிமேகலைக் கூறியிருந்தார்.






ட்விட்டர் பதிவு நீக்கம்:


இந்த போஸ்டர் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதையடுத்து ட்விட்டர் நிறுவனம் அந்த பதிவை நீக்கியுள்ளது. இது குறித்து தி டெலக்ராப் செய்தி தளத்தில் வெளியாகியுள்ளதை க்வோட் செய்துள்ள லீனா மணிமேகலை, "இது மிகவும் நட்கைப்புக்குரியது. இந்த லோலைஃப் ட்ரோல்கள் ட்வீட் செய்து, ஆட்சேபனைக்குரியதாகக் கருதும் அதே போஸ்டரைப் பரப்பினார்கள். போஸ்டர் குறித்து வெறுப்பை கக்கிய 200000 பயனர்களின் பதிவை நீக்குமா ட்விட்டர் நிறுவனம்? காளியை ஒருபோதும் தாக்க முடியாது, காளியை பாலியல் வன்கொடுமை செய்ய முடியாது, காளியை அழிக்கவே முடியாது, அவள் மரணத்தின் கடவுள் என்று கூறியுள்ளார்.