பங்களாதேஷ் நாட்டுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள முக்கிய பிரபலங்களை சந்தித்து உரையாடினார். அப்போது வங்கதேச விடுதலைக்காக தான் சிறைக்கு சென்றேன் என தெரிவித்தார். இது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. பிரதமர் கூறுவது உண்மையில்லை என எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். மறுபுறம் மோடி வங்கதேச விடுதலைக்காக சிறை சென்றது உண்மை என பாஜக தரப்பில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சாரல் படேல் , தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

Have filed an RTI with PMO seeking more details of the claims made by #PMModi during his visit to #Bangladesh today.

I am very curious to know, under which Indian law was he arrested and which jail was he lodged at during his arrest, aren't you? 🤔😊#LieLikeModi pic.twitter.com/uvTMRjccq7
— Saral Patel (@SaralPatel) March 26, 2021

அதில் மோடி சிறைக்கு சென்றது உண்மையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். சென்றது உண்மை என்றால் எந்த ஆண்டு?, என்ன தேதியில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்? ஆகிய விவரங்கள் வேண்டுமென கேட்டுள்ளார். மேலும் எந்த சட்டத்தின் அடிப்படையில் மோடி கைது செய்யப்பட்டார் எனவும் சாரல் படேல் தகவல் கேட்டுள்ளார். மோடி வங்கதேச விடுதலைக்காக சிறைவாசம் அனுபவித்த சிறை குறித்த தகவலையும் கேட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.