ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவன தலைவரும் பிரபல தொழிலதிபருமான திருபாய் அம்பானியின் பிறந்த தினம் இன்று. (28.12.1932) உலக தலைசிறந்த நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் இன்றைக்கு அடைந்திருக்கும் உயரங்களுக்கு தொடக்கமாக விளங்கியவர் திருபாய் அம்பானி. 


யார் இந்த திருபாய் அம்பானி?


1932 ஆம் ஆண்டு குஜராத்தில் உள்ள சோர்வாடில் பிறந்தார். பல தலைமுறை தொழில்முனைவோருக்கு உத்வேகமாக இருப்பது திருபாய் அம்பானியில் வெற்றிக் கதை. இவரது தந்தை பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர். எளிமையான குடும்பத்தில் பிறந்தவர் இன்று உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு தன் உழைப்பால் உயர்ந்தவர். 1950-களில் பெரிய ட்ரேடிங் நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக பணியை தொடங்கினார்.


அந்நிறுவன ஷெல் பொருட்களின் விநியோகஸ்தராகவும் ஆன பிறகு திருபாய் அம்பானிக்கு ஆயில் ஃபில்லிங் ஸ்டேசனை நிரப்பும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு பதவி உயர்வு பெற்றார். பணிக்காக ஏமன் சென்றார். அவரின் வெற்றிப் பயணம் இங்கிருந்தே தொடங்கியது எனலாம். திருபாய் அம்பானிக்கு தனியாக ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என தோன்றியிருக்கிறது. டிரேடிங், அக்கவுண்டிங் உள்ளிட்ட தன் கனவுக்கு தேவையானவற்றை முழு ஆர்வத்துடன் கற்று தேர்ந்தார். இந்திய திரும்பியவர் மும்பையில் தன் தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார்.


திருபாய் அம்பானி கடந்து வந்த பாதை - சுவாரஸ்ய தகவல்கள்



  • 1950-ல்  ’Reliance Commercial Corporation’ என்ற மசாலா வர்த்தக நிறுவனத்தை தொடங்கினார். அதோடு, தரம் வாய்ந்த பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என நோக்கத்தோடு பல வணிக முன்னெடுப்புகளை தொடங்கினார்.

  • 1966-ல் முதல் ரிலையன்ஸ் டெக்ஸ்ட்டைல் மில் தொடங்கினார். 19750-ல் நரோடாவில் டெக்ஸ்டைல் ஆலையை நிறுவினார். பின்னாளில் இதுவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் அலுவலகமானது. 

  • 1977-ல் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஐ.பி,ஓ. முன்னெடுத்தார். முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. நடுத்தர வர்க்க மக்களுக்கும் ட்ரேடிங், முதலீடு செய்வது நல்ல தேர்வு என்பதை அறிமுகப்படுத்தினார். நல்வாய்ப்பை ஏற்படுத்தினார்.

  • ரிலையன்ஸ் ஐபிஓ வெற்றி பெற்றது. பெரும் எண்ணிக்கையிலான நடுத்தர வர்க்க முதலீட்டாளர்களை தங்கள் பணத்தையும் நம்பிக்கையையும் பயமின்றி ஒடு நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

  • 2007ல் அம்பானி குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 60 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருந்தது.

  • மார்க்கெடிங்கள் யுக்திகளில் சிறந்து விளங்கினார். 1983ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஸ்பான்ஸர் செய்யும் அளவுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் வளர்ந்தது.

  • பெட்ரோ கெமிக்கல்ஸ், சுத்திகரிப்பு மற்றும் தொலைத்தொடர்பு போன்ற பல்வேறு தொழில்களில் ரிலையன்ஸின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை வழங்கியது அவரின் ஐடியா. horizontal business முறையை தேர்வு செய்து. தொழிலை விரிவுபடுத்தினார்.

  • நிறுவனத்தின் வளர்ச்சியோடு சேர்ந்து அங்கு பணிபுரியும் பணியாளர்களின் நலனிலும் அக்கறை கொண்டவராக இருந்தார். அவர்களின் திறமை, புதிய முயற்சிகளை பாராட்டி வெகுமதி அளிப்பவராக இருந்திருக்கிறார். இதுவும் நிறுவனத்தின் வெற்றிப் பயணத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்திருக்கிறது.

  • 1980-களின் இறுதியில் திருபாய் அம்பானி தொழில் பொறுப்புகளை அவரது மகன்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பாபியிடம்  ஒப்படைத்துவிட்டு ஆலோசகராக மட்டுமே செயல்பட்டார். 2002, ஜூலை, 6 தேதி மறைந்தார். வணிகம் மற்றும் தொழில்துறை ஆகியவற்றிற்கு திருபாய் அம்பானி ஆற்றிய பங்கினை பாராட்டும் விதமாக அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.


ரிலையன்ஸ் குடும்ப தினம்


திருபாய் அம்பானியின் பிறந்த நாள் ரிலையன்ஸ் குடும்ப தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் தலைசிறந்த  பல வணிகள் நிறுவனங்கள் சேர்ந்த (conglomerate) கூட்டு நிறுவனங்களில் முதல் 10 இடங்களை பிடிக்கும் என ரிலையன்ஸ் குடும்ப தின நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். வளர்ச்சியில் ஒருபோதும் திருப்தியடையாமல் தொடர்ந்து முன்னேறும் நிறுவனமாக ரிலையன்ஸ் குழுமம் இருக்கும் என அவர் நிகழ்ச்சி உரையில் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் செய்த தவறுகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்காமல், அதிலேயே உங்கள் சக்தியை வீணாக்க கூடாது. தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்க கற்றுக்கொள்ளுங்கள் என்றும் பணியாளர்களுக்கு முகேஷ் அம்பானி அறிவுரை வழங்கியுள்ளார்.