வருகிற அக்டோபர் 24 ஆம் தேதி இந்தியா முழுவதும் கோலாகலமாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள சூழலில் , இந்திய இரயில்வே சில ரயில்களை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் முழு விவரங்களையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள சூழலில் இந்திய இரயில்வே இன்று (அக்டோபர் 22 ) 87 ரயில்களை முழுமையாகவும், 22 ரயில்களை பகுதியளவிலும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் புனே, பதன்கோட், சதாரா மற்றும் நாக்பூர் போன்ற பல்வேறு இந்திய நகரங்களில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களின் முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களின் வங்கிக் கணக்குகளில் முன்பதிவிற்கு செலுத்திய பணம் திருப்பி அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட இரயில் எண்கள் பின்வருமாறு:
01203 , 01324 , 01535 , 01536 , 01537 , 01538 , 01539 , 01540 , 01605 , 01606 , 01607 , 01608 , 01609 , 01610 , 01885 , 01886 , 03086 , 03087 , 03094 , 03591 , 03592 , 04551 , 04552 , 04601 , 04602 , 04647 , 04648 , 04685 , 04686 , 04699 , 04700 , 05334 , 05366 , 05518 , 06802 , 06803 , 06980 , 08504 , 08665 , 08666 , 09108 , 09109 , 09110 , 09113 , 09484 , 10101 , 10102 , 13309 , 13310 , 13343 , 13344 , 14203 , 14204 , 14213 , 14214 , 20948 , 20949 , 31411 , 31414 , 31423 , 31432 , 31711 , 31712 , 36033 , 36034 , 36823 , 36825 , 36838 , 36840 , 37305 , 37306 , 37307 , 37308 , 37319 , 37327 , 37330 , 37338 , 37343 , 37348 , 37411 , 37412 , 37415 , 37416 , 37731 , 37732 , 37825 , 37836
ரத்து செய்யப்பட்ட இரயில் விவரங்களை எவ்வாறு அறிந்துக்கொள்வது எப்படி :
- www.indianrail.gov.in/mntes என்னும் இணையதள முகவரிக்கு சென்று , அதில் பயண தேதியை குறிப்பிட்டுக்கொள்ளுங்கள் .
- திறக்கும் பக்கத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள Exceptional Trains என்னும் வசதியை க்ளிக் செய்துக்கொள்ளுங்கள்
- தற்போது ரத்து செய்யப்பட்ட இரயில் வசதி அதாவது Cancelled Trains என்னும் வசதியை க்ளிக் செய்துக்கொள்ளுங்கள்.
- இப்போது, நேரம், வழித்தடங்கள் மற்றும் பிற விவரங்களுடன் ரயில்களின் முழுப் பட்டியலைப் பார்க்க, முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ (Fully or Partially option) விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
ரயிலில் பயணம் செய்யும் பயணிகள், ரயில்களின் அட்டவணைகள் மற்றும் வருகை மற்றும் புறப்படும் நேரம் தொடர்பான அனைத்து விவரங்களையும் சரிபார்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகம் இருந்தால் பயணிகள் NTES மொபைல் செயலி மூலம் கேட்டுக்கொள்ளும் வசதி இருக்கிறது.