இந்திய ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல் - ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக உதயநிதி

ஒரே நாடு - ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருப்பது இந்திய ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல்.

Continues below advertisement

 

Continues below advertisement

‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருப்பது இந்திய ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து எக்ஸ் தளத்தில், “‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருப்பது இந்திய ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல்.

ஒன்றியத்திலும் மாநிலங்களிலும் சர்வாதிகாரத்திற்கு களம் அமைக்கும் சதித்திட்டம் இது. எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களை ஆளுநர் மூலம் ஆளலாம் என்கிற தந்திரமும் இதில் உள்ளது.

இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைத்து, மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, கடைசியில் மாநிலங்களையே ஒழிக்க தான் ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ திட்டம் வழிவகுக்கும்.

பேராபத்தான இத்திட்டத்தை நமது கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் வலிமையுடன் எதிர்ப்போம்! மாநிலங்களைக் காப்போம்!!” எனத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. குளிர்கால கூட்டட்தொடரில் இதுதொடர்பான மசோதாவை அரசு கொண்டு வர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்து உறுதியாக தெரிவித்துள்ளார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola