மேலும் வீட்டிற்குள் வரும் போது எச்சரிக்கையாக வருமாறு கடிதம் ஒன்றை எழுதி, கதவிற்கு அருகில் வைத்துள்ளனர்.


டெல்லி குடும்பம்:




டெல்லி வசந்த் விஹார் பகுதியில் உள்ள வீட்டில்  தாய் மஞ்சு மற்றும் மகள் ஹன்சிகா மற்றும் அன்க்கு ஆகியோர் வசித்து வந்துள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மஞ்சுவின் கணவர் அமர் குமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் அந்த குடும்பம் சோகத்தில் இருந்துள்ளனர். மேலும் அமர் குமார் இறந்த பிறகு, குடும்பத்திற்கு போதிய வருமானம் இல்லை என கூறப்படுகிறது.


சந்தேகம்:


டெல்லி குடும்பத்தினரின் வீடு பூட்டி கிடப்பதை பார்த்த பக்கத்து வீட்டினர் சந்தேகம் அடைந்தனர். வீட்டின் அருகே சென்ற பார்த்தபோது வீட்டின் ஜன்னல்கள் எல்லாம் பூட்டி இருந்தது. மேலும் கதவை தட்டி பார்த்தபோது யாரும் கதவை திறக்கவில்லை.இதனால் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.


எச்சரிக்கை கடிதம்:


சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை திறந்த போது, கதவின் அருகே கடிதம் இருந்துள்ளது. அந்த கடிதத்தில் குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாவது, தங்களின் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை.மேலும் வீட்டின் உள்ளே வருபவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக வரவும். வீடு முழுக்க விஷ வாயு நிரப்பப்பட்டுள்ளது(கார்பன் மோனாக்சைடு). சிறு தவறு நிகழ்ந்தால் கூட உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். ஆதலால் வீட்டின் உள்ளே வருபவர்கள் பாலிதீன் பேப்பரால் மூடப்பட்டுள்ள ஜன்னல்கள் மற்றும் கதவுகளை திறந்து விட்டு, விஷவாயு வெளியேறிய பின் வருமாறு தெருவித்துள்ளனர்.


காவல் துறையினர் அதிர்ச்சி:




ஜன்னல்கள் மற்றும் திறந்துவிட்டு, விஷ வாயு வெளியேறிய பின்னர் ,காவல்துறையினர் வீட்டின் உள்ளே சென்றபோது,45 வயதுள்ள  தாய் மற்றும் 19 வயது 17 வயது மகள்கள் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளனர். இதை பார்த்து காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர் .


காரணம்


டெல்லி குடும்பத்தினர் எதற்காக தற்கொலை செய்து கொண்டனர்  குறித்த சரியான காரணம் தெரியவில்லை. அமர் குமார்  இறந்ததால் குடும்பத்தினர் சோகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்கொலை குறித்து டெல்லி காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.




எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண