பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அறிவித்துள்ளது. மேலும், பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பொறியியல் வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் பேராசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்துவதாகவும் அறிவித்துள்ளது. பொறியியில் படிப்புகளான பி.இ.. பி.டெக் ஆகிய படிப்புகளுக்கு ஒரு செமஸ்டர் 79 ஆயிரத்து 800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூபாய் 1 லட்சத்து 89 ஆயிரம் வரை வசூலிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.


எம்.இ., எம்.டெக், எம்.ஆர்க் படிப்புகளுக்கு ரூபாய் 1 லட்சத்து 49 ஆயிரம் குறைந்த பட்ச கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான கல்விக்கட்டணமும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு செமஸ்டருக்கான கல்விக்கட்டணம் அதிகபட்சம் ரூபாய் 1 லட்சத்து 49 ஆயிரம் வசூலிக்கலாம் என்று அறிவித்துள்ளது.


பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு குறைந்த பட்சம் ரூபாய் 1.37 லட்சம் முதல் அதிகபட்சம் ரூபாய் 2.60 லட்சம் வரை ஊதியம் வழங்க அகில இந்திய தொழில்நுட்ப உதவிக்குழு அறிவித்துள்ளது. திடீரென பொறியில் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண