Delhi Fog: டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் கடும் குளிர் நிலவி வருகிறது.
டெல்லியை வாட்டும் குளிர்:
வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. அதிக பனிமூட்டம் நிலவுவதால் எங்க பார்த்தாலும் புகைமூட்டம் போல் காட்சியளிக்கிறது. கடந்த சில நாட்களாக பனிமூட்டதால் ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, டெல்லி, பஞ்சாப், உத்தர பிரதேசம், ஹரியான உளிட்ட மாநிலங்களில் அதிகாலை முதலோ கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. அதிகாலையிலேயே பனிமூட்டம் மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) படி, தேசிய தலைநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.
பனிமூட்டம் நிலவியதால் 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், டெல்லி ரயில் நிலையத்தில் 30 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளனர்.
3 நாட்களுக்கு தொடரும்:
அடுத்த 3 நாட்களுக்கு வட மாநிலங்களில் பனிமூட்டம் தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், "பஞ்சாப், டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் அடர்த்தியாக பனிமூட்டம் நிலவுகிறது. கிழக்கு பகுதியில் பரவலாக பனிமூட்டம் நிலவுகிறது. குளிர்ந்த காற்றும், அடர்ந்த பனிமூட்டம் அடுத்த 3 நாட்களுக்கு தொடரும்.
இதனால், டெல்லிக்கு இன்றும், நாளையும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காலை நேரத்தில் அடர்ந்த பனிமூட்டம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸாக பதிவாகி உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகிய விவேக் ராமசாமி - அமெரிக்க அரசியலில் பரபரப்பு